பிடிவாரண்ட்டால் முன்னாள் சிறப்பு டிஜிபி நேரில் ஆஜர் : பாலியல் வழக்கில் திடீர் திருப்பம்.. நீதிபதி போட்ட கண்டிஷன்!!

 


பெண் ஐ.பி.எஸ் அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கு விசாரணைக்காக விழுப்புரம் நீதிமன்றத்தில் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ், முன்னாள் எஸ்.பி கண்ணன் ஆஜராகினர்.

கடந்த அதிமுக ஆட்சியில் அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு பாதுகாப்பு பணிக்கு சென்ற இடத்தில் பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜஷ்தாஸ், முன்னாள் செங்கல்பட்டு எஸ்பி கண்ணன் ஆகிய இருவர் மீது விழுப்புரம் சி.பி.சி.ஐ.டி போலிசார் வழக்குப்பதிவு செய்து, வழக்கு விசாரனை, விழுப்புரம் மாவட்ட தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைப்பெற்று வருகின்றன.

வழக்கு இன்று விசாரனைக்கு வந்த போது நீதிபதி கோபிநாதன் முன்னிலையில் குற்றம் சாட்டப்பட்ட ராஜேஷ்தாஸ், கண்ணன் இருவரும் ஆஜராயினர். இன்று நடைபெற்ற வழக்கு விசாரணையில், ராஜேஷ் தாஸ் தரப்பில்,பெண் எஸ்பி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆதாரங்கள் பார்க்கும் படியும், படிக்கும் படியாக தெளிவாக இல்லை, அதனை தெளிவாக சமர்ப்பிக்க வேண்டும் என ராஜேஷ் தாஸ் தரப்பில் கோரப்பட்டது.

மேலும் சி.சி.டி.வி கண்காணிப்பு காட்சிப் பதிவுகளையும் சமர்ப்பிக்க வேண்டும் என்று ராஜேஷ் தாஸ் தரப்பில் கோரப்பட்டது. அதற்கு அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து ஆதாரங்களை பெண்டிரைவில் ராஜேஷ்தாஸ் சமர்ப்பிக்க நீதிபதி உத்தரவிட்டு வழக்கு விசாரணை நாளைக்கு (02-11-21) ஒத்தி வைத்தார் நீதிபதி கோபிநாதன்.

கடந்த 29 ஆம் தேதி வழக்கு விசாரணையின் போது 1 ஆம் தேதி கண்டிப்பாக ராஜேஷ்தாஸ் ஆஜராக வேண்டும் இல்லை என்றால் பிடிவாரண்ட் பிறபிக்கப்படும் என்று நீதிபதியின் எச்சரிக்கையை அடுத்து இன்று ராஜேஷ் தாஸ் நீதிமன்றத்தில் ஆஜரானர் என்பது குறிப்பிடத்தக்கது

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

மாநில மனித உரிமை ஆணையத் தின் உறுப்பினர் துரைஜெய சந்திரன் நேற்றுடன் பணி ஓய்வு பெற்றார்-5 ஆண்டுகளில் 19,298 வழக்குகள் விசாரணை