கஞ்சா விற்ற வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது

 


ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் தீபா சத்யன் உத்தரவு படி ராணிப்பேட்டை மாவட்டத்தில் தொடர்ந்து சமுதாயத்தைச் சீர் குலைக்கும் கள்ளச்சாராயம் காஞ்சா, குட்கா, விற்பனை போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது

 அதன்படி மாவட்டம் அரக்கோணம் தாலுகா மோசூர், ஜடேரி ரோடு, என்ற முகவரியில் சேர்ந்த  வயது 27 த /பெ சசிகுமார் என்பவர் அரசால் தடை செய்யப்பட்ட உயிருக்கு கேடு விளைவிக்கும் கஞ்சாவை தொடர்ந்து விற்பனை செய்து வந்துள்ளார் 

இவர் மீது அரக்கோணம் காவல் நிலையத்தில் கஞ்சா விற்பனை செய்த பல வழக்குகள் நிலுவையில் உள்ளது இவர் தொடர்ந்து இதுபோன்று கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதால் இவர் மீது நடவடிக்கை எடுத்து கட்டுப்படுத்தும் வகையில்

 ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபன்  ஓர் ஆண்டு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க பரிந்துரை செய்ததன் பேரில் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர்  பாஸ்கர பாண்டியன் மேற்படி நபரை ஓராண்டு குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பித்தார்

 அதன்படி  அரக்கோணம் காவல் ஆய்வாளர் சீனிவாசன் மேற்படி குற்றவாளி கைது செய்து சேலம் புதிய மத்திய சிறையில் அடைத்தார் இனிவரும் காலங்களில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் குட்கா, பான்மசாலா, புகையிலை 

 உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் ஒரு ஆண்டு குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்