அமைச்சர் வேகத்திற்கு ஈடுகொடுத்து வேலை செய்ய முடியவில்லை - ராஜேஷ் லக்கானி

 மின்சாரத் துறை அமைச்சரின் வேகத்திற்கு ஈடு கொடுத்து எங்களால் வேலை செய்ய முடியவில்லை. அந்த அளவிற்கு துறை ரீதியான நடவடிக்கையில் செயல்பட்டு வருகிறார் என கரூரில் நடைபெற்ற தொழில் முனைவோர் கருத்தரங்கு கூட்டத்தில் மின்சாரத் துறை மேலாண்மை தலைவர் ராஜேஷ் லக்கானி புகழாரம் சூட்டியுள்ளார்.



மின்சாரத்துறை அமைச்சர் வேகத்திற்கு ஈடுகொடுத்து வேலை செய்ய முடியவில்லை - ராஜேஷ் லக்கானி


கரூரில், தொழில் முனைவோருக்கு  அரசு மானியத்துடன் கடனுதவி வழங்கும் விழா மற்றும் தொழில் வழிகாட்டு நெறிமுறைகள், ஏற்றுமதி கருத்தரங்கம் நடைபெற்றது.தமிழக மின்சாரத் துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி கலந்துகொண்டு 100‍ தொழில் முனைவோர்களுக்கு ரூ.34.01 கோடி மதிப்பீட்டில் ரூ. 8.18 கோடி அரசு மானியத்துடன் கூடிய கடன் ஒப்புதல் ஆணையை அமைச்சர் வழங்கினார். இவ்விழாவில் மின்சாரத் துறை மேலாண்மை தலைவர் ராஜேஷ் லக்கானி, மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 



மின்சாரத்துறை அமைச்சர் வேகத்திற்கு ஈடுகொடுத்து வேலை செய்ய முடியவில்லை - ராஜேஷ் லக்கானி


நிகழ்வில், அரசினர் தொழில் பயிற்சி மையம் மற்றும் தொழில் நுட்ப கல்லூரியில் படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உறுதி செய்யும் வகையில் தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம், மற்றும் 200 மகளிருக்கு தையல் பயிற்சி அளித்து வேலை வழங்குவதற்காக இந்திய தொழிற் கூட்டமைப்பு (CII ) நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து வைத்தார். மேலும், தொழில் நிறுவனங்களுக்கு ஒரு முனையில் புதிய உரிமங்கள் "ஒற்றை சாளர கண்காணிப்பு" இணைய முகவை துவக்கி வைத்தார்.விழாவில் பங்கேற்ற   மின்சாரத் துறை மேலாண்மை தலைவர் ராஜேஷ் லக்கானி பேசுகையில்,


 



மின்சாரத்துறை அமைச்சர் வேகத்திற்கு ஈடுகொடுத்து வேலை செய்ய முடியவில்லை - ராஜேஷ் லக்கானி


”மின்சாரத் துறை அமைச்சரின் வேகத்திற்கு ஈடு கொடுத்து எங்களால் வேலை செய்ய முடியவில்லை. அந்த அளவிற்கு துறை ரீதியான நடவடிக்கையில் செயல்பட்டு வருகிறார். பல அமைச்சர்களிடம் பணியாற்றியுள்ளேன். அமைச்சர் செந்தில் பாலாஜி அளவிற்கு வேகமாக செயல்படும் அமைச்சரை பார்த்தது இல்லை” என புகழாரம் சூட்டியுள்ளார். பதவி ஏற்று 6 மாதங்களில் 1 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்குவதில் சிறப்பான நடவடிக்கை மேற்கொண்டார். ஒரே நேரத்தில் 1 லட்சம் மின் இணைப்பு வழங்குவது இதுவே முதல் முறையாகும் என்றார் ராஜேஷ் லக்கானி.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்