‘எல்லா சுற்றும் திமுக ஜெயிச்சுதுனு சொல்லிக்கோங்க‘ : வெற்றியை அறிவிக்காததால் திமுக – அதிமுக இடையே மோதல்!!

 


அனைக்கட்டு ஊராட்சி ஒன்றிய வாக்குசாவடியில் அனைத்து கட்சியினரிடையே தள்ளு முள்ளு ஏற்பட்டதை படம் பிடித்த செய்தியாளர் செல்போன் பறித்து ஏ டிஎஸ்பி அராஜகத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

வேலூர் மாவட்டம் இறைவன் காட்டில் அன்னை பாலிடெக்னிக்கில் அனைக்கட்டு ஊராட்சி ஒன்றியத்தின் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

காலை முதல் நடைபெற்ற எண்ணிக்கையில் யாரும் வெற்றி பெற்றதாக தேர்தல் அதிகாரியும் பிடி ஓவுமான கணகராஜ் அறிவிக்கவில்லை. இதனால் எல்லா கட்சியினரும் ஆர்.ஓ.அறையை முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்தனர். இதனால் தள்ளுமுள்ளு மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டது.

இதனை படம்பிடித்த செய்தியாளரின் செல்போனை ஏடிஎஸ்பி சுந்தரமூர்த்தி பறித்துகொண்டு செய்தியாளரை தாக்க முயன்றார். இதனால் மேலும் அங்கு பரபரப்பு காணப்பட்டது.

இதனால் போலீசார் குவிக்கப்பட்டு அங்கிருந்தவர்களை வெளியேற்றினர். இந்த குழப்பத்திற்கும் பிரச்சணைக்கும் பி.டி.ஓ கனகராஜ் தான் காரணம் என கூறப்படுகிறது.

வெற்றி பெற்றது யார் என்று மாவட்ட ஆட்சியர் 4 முறை வேட்பாளர்களின் வெற்றியை அறிவிக்க பிடி ஓவிடம் கூறியும் அவர் இதனை செய்யாததே இந்த பிரச்சணைக்கு காரணம் என்பது குறிப்பிடத்தக்கது

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

மாநில மனித உரிமை ஆணையத் தின் உறுப்பினர் துரைஜெய சந்திரன் நேற்றுடன் பணி ஓய்வு பெற்றார்-5 ஆண்டுகளில் 19,298 வழக்குகள் விசாரணை