மயானத்தில் சடலத்தின் மீது அமர்ந்து ‘நான் கடவுள்’ பாணியில் காசி அகோரிகள் நடத்திய சடங்கு : பீதியை கிளப்பிய விநோத பூஜை!!
திருச்சி : காசியில் நடக்கும் சடங்கைப் போல மயானத்தில் சடலத்தின் மீது அமர்ந்து அகோரிகள் நடத்திய ஆத்மா சாந்தி பூஜை மெய்சிலிர்க்க வைத்தது.
திருச்சி மாவட்டம், மணிகண்டத்தில் உள்ள குடிசை மாற்று வாரியத்தில் வசித்து வந்தவர் வெங்கடேஷ். நேற்று முன் தினம் கேரள மாநிலம் பாலக்காட்டில் விபத்து ஒன்றில் சிக்கினார். இதையடுத்து அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதையடத்து அவரது உடல் சொந்த ஊரான திருச்சி மணிகண்டம் பகுதியில் உள்ள வீட்டுக்கு எடுத்து வரப்பட்து. பின்னர் இறுதி சடங்கிற்காக திருச்சி அரியமங்கலத்தில் உள்ள சமுதாய நல்லிணக்க சுடுகாட்டிற்கு சடலத்தை வெங்கடேஷ் குடும்பத்தின் எடுத்து வந்தனர்.
அப்போது காசியில் பயிற்சி பெற்று, திருச்சி அரியமங்கலத்தில் ஜெய் அகோர காளி சிலையை பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்தி வரும் அகோரி மணிகண்டன் என்பவர் தன் சிஷ்ய அகோரிகள் உடல் முழுவதும் திருநீறு அணிந்து கொண்டு மயானத்திற்கு வந்தனர்.
கங்கை ஆற்றின் கரையில் வாழும் சைவ சமய ஆன்மீகவாதிகளான அகோரிகளின் பழக்கவழக்கங்கள் மற்றும் சம்பிரதாயங்கள் மனித வாழ்கைக்கு அப்பாற்றபட்டவை.
இவர்கள் சிவனின் கோர ரூபமான பைரவரையும் வீரபத்திரரையும் வழிபடுவர். உடலுக்கு ஆடை ஏதும் அணியாமல் மனித எலும்புகளால் ஆன மாலையும், இடது கையில் மண்டை ஓட்டையும், வலது கையில் மணியும் அணிந்து சுற்றுவதுதான் இவர்களுடைய அடையாளம்.
இவர்கள் இந்துசமய ஆன்மீகவாதிகள் என்றும் இவர்கள் இப்படி நிர்வாணமாக இருப்பதும் ஒருவகையில் கடவுள் பக்தி என்றும் அதற்கு சில புராண கதைகளையும், சில கதைகளை அகோரிகள் குறித்து சொல்கின்றன. ஏன் தமிழில் இயக்குநர் பாலா உருவாக்கிய நான் கடவுள் திரைப்படம் அகோரிகளின் கதைகளை பிரதிப்பலித்தது.
காசியில் உள்ள அகோரிகள் திருச்சி மயானத்திற்கு வந்து சடலத்தில் பூஜை செய்து வழிபட காரணம், உயிரிழந்த வெங்கடேஷ் ஏற்கனவே அகோரி மணிகண்டன் என்பவரிடம் சிஷ்யராக இருந்ததால்தான்.
மயானத்தில் வெங்கடேசனின் குடும்பத்தினர் செய்ய வேண்டிய இறுதி சடங்கை முடித்த பின்னர் அகோரி மணிகண்டன், உயிரிழந்த வெங்கடேஷ் சடலத்தின் மீது அமர்ந்து மந்திரங்கள் கூறி ஆன்ம சாந்தி பூஜை செய்தார்.
அப்போது சக அகோரிகள் டம்ரா மேளம் அடித்தும் சங்கு ஒலி எழுப்பியும் பூஜையில் ஈடுபட்டனர். குடும்பத்தினரின் அனுமதியோடு அகோரிகளின் ஆன்ம சாந்தி பூஜை நடைபெற்றதாக கூறப்படுகிறது. இந்த வினோத பூஜையானது காசியில் மட்டுமே காணமுடியும்.
ஆனால் உயிரிழந்த வெங்கடேஷ் எதிர்பாராத விதமாக விபத்தில் உயிரிழந்ததால் உடனே காரியங்கள் செய்ய வேண்டிய காரணத்தால் குடும்பத்தினர் விருப்பப்படி இந்த வினோத பூஜை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது