வலியில் துடித்த காவல் ஆய்வாளர்.. கால்களைப் பிடித்து சிகிச்சை அளித்த செங்கல்பட்டு எஸ்.பி..!

 


செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் ஐபிஎஸ் பணிபுரிந்து வருகிறார். இவரை ஐபிஎஸ் தேர்வு எழுதுவதற்கு முன்பு எம்பிபிஎஸ் முடித்து மருத்துவராக பணிபுரிந்து வந்தது குறிப்பிடத்தக்கது. செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொறுப்பேற்ற பிறகு, மக்களிடமும் மற்றும் சக காவலர்கள் இடமும் நெருங்கிப் பழகுவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.  கிராம விழிப்புணர்வு குழு மூலம் நேரடியாக கிராமங்களுக்குச் சென்று பொதுமக்களுக்கு குற்றச் செயல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்தி வருகிறார்.



காஞ்சிபுரம் : வலியில் துடித்த காவல் ஆய்வாளர்.. கால்களைப் பிடித்து சிகிச்சை அளித்த செங்கல்பட்டு எஸ்.பி..!

இதன் காரணமாக செங்கல்பட்டு பகுதியில் பொறுப்பேற்ற குறுகிய காலத்தில், பொது மக்களிடையே நற்பெயர் பெற்று உள்ளார். மேலும், செங்கல்பட்டு மாவட்டத்தில் சைபர் குற்றங்களை தடுப்பதற்காக தன்னார்வ இளைஞர்களை கொண்டு முயற்சியும் எடுத்து வருகிறார். முன்னதாக, திருப்பத்தூரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்தபோது கொரோனா இரண்டாம் அலையை திறம்பட கையாண்டு மக்களின் மதிப்பைப் பெற்றார். மருத்துவர் என்பதால் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் இவர் மிக முக்கிய பங்கு வகித்தார். பரவலை கட்டுப்படுத்துவதிலும், மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும் இவர் முக்கிய பங்கு வகித்தார். 


காஞ்சிபுரம் : வலியில் துடித்த காவல் ஆய்வாளர்.. கால்களைப் பிடித்து சிகிச்சை அளித்த செங்கல்பட்டு எஸ்.பி..!

இந்நிலையில், இந்த நிலையில்தான் இன்று இவர் செய்த செயல் ஒன்று காவல்துறையினர் மத்தியிலும், மக்கள் மத்தியிலும் பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிந்து மாவட்ட தலைவர், ஒன்றிய தலைவர், துணைத்தலைவர் ஆகிய மறைமுக தேர்தல் நடைபெற்று வருகிறது பதிவுகளை பெறுவதற்காக  ஆங்காங்கே மோதல் வெடிக்கும் நிலையில் கடும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதேபோல் செங்கல்பட்டு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில், காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


காஞ்சிபுரம் : வலியில் துடித்த காவல் ஆய்வாளர்.. கால்களைப் பிடித்து சிகிச்சை அளித்த செங்கல்பட்டு எஸ்.பி..!

மதுராந்தகம் ஒன்றியத்தில், திமுக சார்பில் இரண்டு வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்ததால் தொடர்ந்து பரபரப்பு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் இரண்டு தரப்பினரும் மாறி மாறி தாக்கிக் கொண்டனர். காவல்துறையினர் அவர்களை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதுகுறித்து தகவலறிந்த செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். 

 

 மதுராந்தகம் பகுதியில்  விஜயகுமார் ஆய்வு செய்தபோது அங்கு பணியில் இருந்த மதுராந்தகம் காவல் ஆய்வாளர் ருக்மாங்கதன் பதற்றத்தில் ஓடிவரும் பொழுது காலில் தசைப் பிடிப்பு ஏற்பட்டது. இதனால் அதற்கு மேல் நடக்க முடியாமல் அந்த இடத்திலேயே காலை பிடித்தபடி அந்த காவல் ஆய்வாளர் உட்கார்ந்தார். அந்த காவல் ஆய்வாளர் அங்கேயே காலை பிடித்துக்கொண்டு வலியில் துடித்தார்.'


காஞ்சிபுரம் : வலியில் துடித்த காவல் ஆய்வாளர்.. கால்களைப் பிடித்து சிகிச்சை அளித்த செங்கல்பட்டு எஸ்.பி..!

அப்பொழுது அதை பார்த்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் கொஞ்சம் கூட யோசிக்காமல் உடனடியாக சென்று, அந்த ஆய்வாளர் காலை பிடித்து சோதனை செய்தார். மருத்துவம் படித்தவர் என்பதால் அங்கேயே பாதிக்கப்பட்ட ஆய்வாளர் அவர்களுக்கு முதல் உதவி சிகிச்சை அளித்தார். இதனால் கால் பிடிப்பு சரியான அதிகாரி எழுந்து மெதுவாக நடந்தார். காவல் ஆய்வாளர் ஒருவர் காலை பிடித்து எஸ்பி ரேங்க் அதிகாரி ஒருவர் திடீரென இப்படி முதலுதவி செய்தது அந்த சக காவலர்கள் இடையே வரவேற்பை பெற்றுள்ளது.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்