பிக்கப் வாகனத்தை பந்தாடிய காட்டு யானை : வாகனங்களை வழிமறித்து ஆக்ரோஷம்!!

 


ஈரோடு : பண்ணாரி சோதனை சாவடி அருகே வாகனங்களை வழி மறித்து நின்று சேட்டை செய்த ஒற்றை யானையால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான யானைகள் வசிக்கின்றன. இவை அவ்வப்போது வனப்பகுதியை விட்டு வெளியேறி சாலையோரம் நின்று தீவனங்கள் உட்கொள்வதும் சாலையைக் கடப்பது வாடிக்கையாகி வருகின்றன.

கடந்த சில நாட்களாக தாளவாடியில் இருந்து கரும்பு பாரம் ஏற்றி வரும் லாரிகளை ரசிகர்களை குறிவைத்து யானைகள் பண்ணாரி சோதனைச்சாவடி மற்றும் ஆசனூர் காரப்பள்ளம் சோதனைச்சாவடி அருகே முகாமிட்டுள்ளன.

இந்த நிலையில் இன்று சத்தியமங்கலம் வனப்பகுதியை விட்டு வெளியேறிய காட்டு யானை ஒன்று பண்ணாரி சோதனைச்சாவடி அருகே சாலையில் வந்து கொண்டிருந்த பிக்கப் வேன் ஒன்றை வழிமறித்து நின்றது.

யானையைக் கண்டு பயந்த ஓட்டுனர் வேனை விட்டு வெளியே இறங்கி ஓடியுள்ளார். பின்னர் பின்புறம் வந்த ஈச்சர் வேன் ஓட்டுனர் பயங்கர சத்தத்துடன் வானத்திலுள்ள ஒலிபெருக்கியில் ஒலியை எழுப்பிவுடன் கோபமடைந்த காட்டு யானை பிக்கப் வேனை கோபத்துடன் கீழே தள்ள முயற்சி செய்தது.

அருகே இருந்த வாகன ஓட்டுநர்கள் சத்தம் எழுப்பவே மேலும் கோபமடைந்த யானை பயங்கர சத்தத்துடன் தும்பிக்கையை தூக்கி பிலுரிக்கொண்டு சாலையை கடந்து சென்றது. அதன்பின்னர் வாகனங்கள் சாலையில் செல்ல துவங்கின. வாகனங்களை வழிமறித்து நின்ற யானையால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.