தாம்பரத்தின் காவல் ஆணையராக ஏ.டி.ஜி.பி ரவி..! யார் இவர்? முழு பின்னணி!

 


'ஏ.டி.ஜி.பி ரவி' - ஐ.பி.எஸ் அதிகாரியாக 1991-ம் ஆண்டு பயிற்சி முடித்தார். சைபர்  ஃபாரன்சிக், சைபர் செக்யூரிட்டி பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளார். பயிற்சி காலத்தின் போது உத்தராகண்ட், மிசோரியில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி தேசிய அகாடமியில் குதிரை பந்தயத்தில்  தங்கப்பதக்கம் வென்றார். ரெப்லக்ஸ் சூட்டிங்கிலும் இவர் தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.

 மதுரை அரசு வேளாண்  மற்றும் ஆராய்ச்சி கல்லூரியில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீ வைகுண்டத்தில் முதல் முறையாக காவல்துறை துணை கண்காணிப்பாளராக பணியை துவங்கினார். ஓசூரில் ஏ.எஸ்.பியாக பணியாற்றியபோது பல குற்றங்களை தடுத்து பாராட்டுக்களை பெற்றார்.

பின்னர் பதவி உயர்வு பெற்றார் ரவி ஐ.பி.எஸ் ஒருங்கிணைந்த நாகை, திரூவாரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக பதவி வகித்தார். அங்கு தங்கம் - முத்துக்கிருஷ்ணன் கொலை வழக்கில் திறம்பட செயல்பட்டு குற்றவாளிகளை விரைவாக கண்டறிந்து திறம்பட செயல்பட்டார். 

சாதி கலவரத்தை தடுத்து நிறுத்தி பல்வேறு பெருமைகளை பெற்றார். விழுப்புரம் மாவட்ட எஸ்.பியாக இருந்த போது திண்டிவனத்தில் டாக்டர் அம்பேத்கர் சிலையை சேதப்படுத்திய சம்பவத்தில் கவனமாக செயல்பட்டார். அம்பேத்கர் சிலையை சுற்றி பூந்தோட்டம் அமைத்து அமைதியை நிலவ செய்தார். அமெரிக்க, சீனா, இங்கிலாந்து உள்ளிட்ட மேலை நாடுகளில் சுற்றுப்பயணம் சென்று ஐக்கிய நாடுகளின் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சிங்கப்பூர் சட்ட திட்ச விசாரணைகளை கற்றுக்கொண்டார்.

விழுப்புரம் மாவட்டத்தில் மாதிரி காவல்நிலையங்களை அமைத்தார். பிரான்ஸ் ஆப் போலீஸ் முறையை திறம்பட செயல்படுத்தினர். அப்போது 40 ஆயிரம் தன்னார்வலர்களை இணைய செய்தார். பின்னர் சேலம், திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி, சென்னை ஆயுதப்படை டி.ஐ.ஜி, சென்னை தலைமையிட  நிர்வாக பிரிவு டி.ஐ.ஜி உள்ளிட்ட பதவிகளை வகித்துள்ளார். சென்னையில் சட்ட ஒழுங்கு இணை ஆணையர், சென்னை தலைமையிட கூடுதல் ஆணையர், சென்னை போக்குவரத்து கூடுதல் ஆணையர் பொறுப்பிளும் பங்காற்றியுள்ளார் ரவி ஐ.பி.எஸ். சென்னை இணை ஆணையராக ரவி ஐ.பி.எஸ் பணியாற்றிய போது வட சென்னையில் கட்டுக்கடங்காத ரவுடிகளை கட்டுக்குள் கொண்டுவந்து அமைதியை நிலவ செய்தார்.

கைது செய்யப்பட்ட ரவுடிகளின் குடும்பங்கள் மறுவாழ்வுக்கு வங்கிக் கடன் ஏற்பாடு செய்தார். பின்னர் சென்னை மாநகர போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையராக இருந்த போது, முகநூல் பக்கம், ஈ செல்லான் முறையை அறிமுகம் செய்தார்.  மேட்ரிமோனி மூலம் 200 பெண்களை ஏமாற்றிய லியாத்தலிக்கான் என்ற குற்றவாளியை கண்டறிந்து குற்றவாளியை பிடித்தார். 

சென்னை காவல்துறையின் 150-ம் ஆண்டு கொண்டாட்டத்தின் முன்னிட்டு 'காவலர் நமது சேவகர்' என்ற குறும்படம் திரைக்கதை எழுதி, தயாரித்து அதில் நடிக்கவும் செய்தார். இவரது தலைமையிலான பேட்மிண்டன் அணி பல்வேறு பரிசுகளை வென்றுள்ளது. அதே போல் 2007-ம் சிறந்த சேவைக்கான குடியரசுத் தலைவரின் காவலர் விருதையும், 2016-க்கான புகழ்பெற்ற சேவைக்கான  விருதினையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்