இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் செயினை பறித்த மர்மநபர் : வழக்கில் புதிய திருப்பம்.. காட்டிக் கொடுத்த சிசிடிவி!!

 


மதுரை : இருசக்கர வாகனத்தல் சென்ற பெண்ணின் கழுத்தில் இருந்து செயினை பறித்து செல்லும் மர்மநபர் அந்த செயினை சாலையில் சென்ற ஆட்டோவில் இருந்து ஓட்டுநரிடம் கைமாற்றிய காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை அழகர் கோவில் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த பெண்ணின் கழுத்தில் இருந்து செயினை மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர் பறித்து சென்ற காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

மேலும் செயினை பறித்ததால் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்கள் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்தனர். இந்த சிசிடிவி காட்சியை வைத்து போலீசார் விசாரணை நடத்திய நிலையில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.

பெண்ணிடம் இருந்து செயினை பறித்து சென்ற மர்மநபர் முன்னே சென்ற ஷேர் ஆட்டோ ஓட்டுநரிடம் கைமாற்றும் காட்சிகள் அடங்கிய சிசிடிவி போலீசாரிடம் சிக்கியுள்ளது. ஏற்கனவே திட்டம் போட்டு இந்த வழிப்பறியில் ஈடுபட்டுள்ளனரா என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது தொடர்பான காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Popular posts from this blog

முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்டுகள், செல்போன் மூலம் எடுக்கும் வசதி அறிமுகம் - எப்படி டிக்கெட் எடுப்பது ? தெற்கு ரயில்வே விளக்கம்

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

“பொதுமக்களிடம் காவலர்கள் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும்” -தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு