விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்து தீயணைப்பு மற்றும் மீட்பு மீட்புப்பணியினர் விழிப்புணர்வு பிரச்சாரம்

 


சிப்காட் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையம் சார்பாக  பால்சம் அகாடமி சிபிஎஸ்இ பள்ளி மாணவர்களுக்கு  தீயில்லா மற்றும் விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்து  பட்டாசு வெடிக்கும் போது செய்யக் கூடிய காரியங்கள் செய்யக்கூடாத காரியங்களை குறித்து துண்டுப்பிரசுரம் வழங்கி விளக்கம் அளித்தனர்


 இந்த நிகழ்வுக்கு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள், மாவட்ட அலுவலர் லக்ஷ்மிநாராயணன்தலைமை தாங்கினார் உதவி மாவட்ட அலுவலர் பாஸ்கரன் முன்னிலை வகித்தார்  அருகில் சிப்காட் தீயணைப்பு நிலைய அலுவலர் விநாயகம் மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்பு பணியாளர்கள் உடனிருந்தனர் .