ஏ.சி. பேருந்தில் மேலே லக்கேஜ் கட்டுவதற்காக வைக்கப்பட்டிருந்த கயிறு, கீழே விழுந்து மற்ற வாகனங்களில் சிக்கிய விபத்தின் சிசிடிவி காட்சி

 சென்னை வேப்பேரியில் தனியார் பேருந்தின் மேலே லக்கேஜ் கட்டுவதற்காக வைக்கப்பட்டிருந்த கயிறு கீழே விழுந்து, சாலையில் நின்றிருந்த வாகனங்களில் சிக்கி விபத்தை ஏற்படுத்திய சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

மேலே வைக்கப்பட்டிருந்த கயிறு கீழே விழுந்தது தெரியாமல் ஓட்டுநர் பேருந்தை ஓட்டிச் செல்ல, அந்த கயிறு வரும் வழியில் இருசக்கர வாகனத்தின் மீது சிக்கி, பைக்கை தரதரவென இழுத்துச் சென்றது. பைக்கில் இருந்த இரண்டு சிறிதுதூரம் தூக்கி எறியப்பட்டு காயமடைந்தனர்.
ஈ.வே.ரா. சாலை சிக்னலில் பேருந்து வளைந்த போது, அங்கிருந்த காவலர் நிழற்குடையில் கயிறு சிக்கிய நிலையில், அந்த நிழற்குடை தூக்கி எறியப்பட்டது. இதில் காவலர் ஆதிகேசன் காயமடைந்தார்.
இது குறித்து பேருந்து ஓட்டுநர் மீது வழக்குப்பதிந்து சிந்தாதிரிப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், கடந்த 17-ந் தேதி நடந்த விபத்தின் சிசிடி தற்போது வெளியாகியுள்ளது.
No photo description available.