ஒரு வாக்கு... சொந்த குடும்பத்தினரின் ஓட்டு கூட விழாத சோகத்தில் பா.ஜ.க வேட்பாளர்!

 


தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன.

அதன்படி, கோவை மாவட்டத்தில் உள்ள கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட குருடம்பாளையம் ஊராட்சி ஒன்பதாவது வார்டு இடைத்தேர்தலில் தி.மு.கவைச் சேர்ந்த அருள்ராஜ், அ.தி.மு.கவை சேர்ந்த வைத்தியலிங்கம், பா.ஜ.கவைச் சேர்ந்த கார்த்திக் ஆகியோர் களம்கண்டனர்.

இதில், தி.மு.கவைச் சேர்ந்த வேட்பாளர் அருள்ராஜ் 387 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். சுயேட்சை வேட்பாளர் ஜெயராஜ் என்பவர் 240 வாக்குகளும், அ.தி.மு.கவைச் சேர்ந்த வேட்பாளர் வைத்தியலிங்கம் 196 வாக்குகளும் பெற்றிருந்தனர்.

இப்படி இருக்கையில், பா.ஜ.கவிலிருந்து போட்டியிட்ட கார்த்திக்கிற்கு ஒரே ஒரு வாக்கு மட்டுமே கிடைத்திருக்கிறது. கார்த்திக் பா.ஜ.க இளைஞரணி மாவட்ட துணைத் தலைவராக உள்ளார்.

இதில் பரிதாபமான தகவல் என்னவெனில், அவரது குடும்ப உறுப்பினர்களாக ஐந்து பேர் இருந்தும் ஒருவர்கூட கார்த்திக்கிற்கு வாக்களிக்கவில்லை. மேலும் பா.ஜ.கவைச் சேர்ந்தவர்களே சொந்தக் கட்சியைச் சேர்ந்த வேட்பாளருக்கு வாக்களிக்காமல் இருந்திருக்கிறார்கள்.

கோவை பகுதியை தமிழ்நாட்டிலிருந்து தனியாகப் பிரிக்கிறோம் என்றெல்லாம் வாய்ச்சவடால் அடித்துவிட்டு அதே கோவையில் உள்ள ஊராட்சி ஒன்றின் வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட தனது கட்சிக்காரருக்கே பா.ஜ.கவினர் வாக்களிக்காமல் படுதோல்வி அடையச் செய்ததுள்ளது அம்பலமாகியுள்ளது.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)