பெற்ற குழந்தையை பார்க்க அனுமதிக்காத மனைவி குடும்பத்தார்: மேம்பாலத்தின் மேல் ஏறி வாலிபர் தற்கொலை முயற்சி

 


மதுரை: பெற்ற குழந்தையை பார்க்க மனைவி குடும்பத்தார் அனுமதிக்காததால் மேம் பாலத்தின் மேல் ஏறி வாலிபர் தற்கொலை முயற்சி செய்தால் மதுரையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மதுரை எல்லீஸ்நகர் மேம்பாலத்தில் வாலிபர் ஒருவர் ஏறி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அப்பகுதியில் சென்ற வாக ஒட்டிகள் வாகனத்தை நிறுத்திவிட்டு அனைவரும் வேடிக்கை பார்த்தனர். ஒரு சிலர் காவல்துறையினரும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதில் ஒரு வாலிபர் தன் உயிரையும் பொருட்படுத்தாமல் பாலத்தின் மேல் ஏறி தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட வாலிபரை மீட்டார். 

மீட்டு சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையிடம் ஒப்படைத்ததாக கூறப்படுகிறது. விசாரணையில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டவர் மதுரை எல்லீஸ் நகர் ஐ சேர்ந்த லெனின் குமார் என்பதும், இவருக்கு குழந்தை பிறந்ததாகவும், குழந்தையை பார்க்க மனைவி குடும்பத்தார் அனுமதி மறுத்ததாகவும், இதனால் மனம் உடைந்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக காவல்துறை விசாரணையில் தெரியவந்தது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்