போலி பத்திரிக்கையாளர்களை களையெடுக்க கடும் நடவடிக்கை: கோவையில் செய்தித்துறை அமைச்சர் பேட்டி..!!

 


கோவை: தமிழகத்தில் போலி பத்திரிகையாளர்களை ஒழிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்துள்ளார்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழக அரசின் திட்டங்களை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் புகைப்பட கண்காட்சி அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. அதனை செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் இன்று திறந்து வைத்தார்.

அதனைத் தொடர்ந்து தீயணைப்பு துறை மற்றும் இயற்கை பேரிடர் மீட்பு படையினர் ஆகிய துறைகளின் சார்பில் இயற்கை பேரிடர்களின் போது எவ்வாறு மீட்பு பணிகளில் ஈடுபடவேண்டும் போன்றவை குறித்த விளக்க நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட அமைச்சர் சாமிநாதன் மீட்புப் பணிகள் குறித்த செயல்முறை விளக்கத்தை பார்த்து துறை அதிகாரிகளுடன் அது சம்பந்தமாக விளக்கங்களை கேட்டு அறிந்தார். தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, தலைமைச்செயலகத்தில் முதலமைச்சர் மேற்கொள்ளும் நலத்திட்ட பணிகள் மற்றும் புதிய பணிகள் குறித்து புகைப்பட கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. அதே போல் அனைத்து பகுதியிலும் அமைக்கப்பட வேண்டும்.

இந்த நிலையில் கோவை மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிரந்தர புகைப்பட கண்காட்சியை திறந்து வைத்தேன். இதன் மூலம் அரசின் திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ள முடியும் மேலும்.

இன்று சர்வதேச பேரிடர் இன்னல் தினம் என்பதால் தீயணைப்புத்துறை பேரிடர் மீட்பு பணிகள் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இயற்கை பேரிடர்களின் போது மேற்கொள்ளப்படும் மீட்பு பணிகள் குறித்து செயல்முறை விளக்கத்தை ஒத்திகை போன்று நடத்திக்காட்டினர்.

இதன் மூலம் அவர்கள் எவ்வாறு மீட்பு பணிகளில் ஈடுபடுகின்றனர். மக்கள் தங்களை எப்படி பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்பது குறித்தும் எளிதாக புரிந்தது. உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் எங்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது. முதலமைச்சரின் செயல்பாடுகள் மற்றும் அவர்களின் திட்டங்கள் மூலம் கிடைத்த மாபெரும் வெற்றி.

பத்திரிக்கையாளர் நலவாரியம் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து அதன் செயல்பாடுகள் மற்றும் அதன் மூலம் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்து விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும். நீதிமன்ற உத்தரவுப்படி விரைவில் நல வாழ்விற்கான பணிகள் தொடங்கும். அதேபோல் இந்த வாரியம் மூலம் போலி பத்திரிக்கையாளர்களை ஒழிப்பதற்கான நடவடிக்கையும் எடுக்கப்படும்.

பத்திரிகையாளர்களுக்கு அடையாள அட்டை போன்றவை வழங்குவது அந்தந்த மாவட்ட நிர்வாகத்தால் மேற்கொள்ளப்படும். மேலும் பத்திரிக்கையாளர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்குவது சம்பந்தமாக அந்தந்த மாவட்ட ஆட்சியர் மற்றும் அந்தத் துறை சார்ந்த அலுவலர்கள் முடிவு செய்து கொள்ளலாம். அதே போல் அந்த மாவட்டத்தில் எந்தெந்த பகுதிகளில் எல்லாம் அரசுக்குச் சொந்தமான நிலங்கள் உள்ளது என்பது குறித்து ஆராய்ந்து அதன் பின்னர் பத்திரிகையாளர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்குவது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்