ஆவினில் ஆட்டுப்பால் விற்பனைக்கு வரும் - அமைச்சர் நாசர்

 


வருங்காலங்களில் ஆவினில் நாட்டு மாட்டுப்பால் மட்டுமன்றி ஆட்டுப்பாலும் விற்கப்படும் என பால்வளத்துறை அமைச்சர் சா.மு. நாசர் தெரிவித்திருக்கிறார்.

ஆவின் பாலை அரசு நிர்ணயித்த விலையைவிட அதிக விலைக்கு விற்றால் தன்னிடம் அல்லது ஆவின் புகார் எண்ணில் தொடர்புகொண்டு புகாரளிக்கலாம் என்றும், அதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் நாசர் தெரிவித்திருந்தார். மேலும் ஆவின் பாலகங்களில் நாட்டு மாட்டுப்பால் விற்பனை செய்வது குறித்து மக்களிடம் கருத்துக் கேட்டு முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என்றும் தெரிவித்திருந்தார். அதேநேரம் நாட்டு மாட்டுப்பாலை தனியாக ஆவின் நிறுவனத்திற்கு கொண்டுவந்து பாக்கெட் தயாரித்து விற்க வேண்டும் என்பதால் நாட்டு மாட்டுபால் விலை அதிகமாகும் என்றும் தெரிவித்திருந்தார். தற்போது ஆட்டுப்பாலும் ஆவினில் விற்பனைக்கு கொண்டுவரப்படும் என தெரிவித்திருக்கிறார்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

மாநில மனித உரிமை ஆணையத் தின் உறுப்பினர் துரைஜெய சந்திரன் நேற்றுடன் பணி ஓய்வு பெற்றார்-5 ஆண்டுகளில் 19,298 வழக்குகள் விசாரணை