அரூர் பேரூராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் சோதனை : ஆவணங்கள் பறிமுதல்

 


தருமபுரி மாவட்டம் அரூர் பேரூராட்சி அலுவலகத்தில்  நகரப்பகுதி குடியிருப்புகளுக்கு அரசு விதிப்படி குடிநீர் இணைப்பு வழங்குதல், தெரு விளக்கு, சாக்கடை கால்வாய்  அமைத்தால் மற்றும் பேரூராட்சிக்கு சொந்தமான பேருந்து நிலையதில் உள்ள கடைகளுக்கு பொது ஏலம் விடாமல், தொடர்ந்து 20 ஆண்டுகளாக ஒரே நபருக்கு வழங்கப்பட்டு வருவது போன்ற பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக, தருமபுரி லஞ்ச ஒழிப்பு துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனை தொடர்ந்து நேற்று மாலை திடீரென இலஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தினர். அப்பொழுது பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அலுவலகத்தில் உள்ள ஊழியர்களிடம் லஞ்ச ஒழிப்புத் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

இந்த விசாரணையில் கடந்த ஆறு மாத காலமாக பல வகையான பொருட்கள் வாங்கியதில் பெருமளவில் முறைகேடுகள் நடந்திருப்பதை கண்டுபித்தனர். தொடர்ந்து அதற்கான ஆவணங்கள் லஞ்ச ஒழிப்புத் துறையினர் கைப்பற்றினர். 

சுமார் 5 மணிநேரமாக நடைபெற்ற விசாரணையில் முறைகேடுகள் செய்ததற்கான முக்கிய ஆவணங்களை இலஞ்ச ஒழிப்பு துறையினர் கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அரூர் பேரூராட்சி அலுவலகத்தில் இலஞ்ச ஒழிப்பு துறையினர் நடத்திய சோதனையால், பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்