வாக்குச்சாவடியில் கத்திக்குத்து : முன்விரோதத்தால் நடந்த விபரீதம்

 


முன்விரோதம் காரணமாக இருவருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் கத்திகுத்து காரணமாக வேலூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

வேலூர் மாவட்டம் அணைகட்டு அடுத்த கெங்கநல்லூர் ஊராட்சி ஆயிரம்குளம் பகுதியில் 8, 9 ஆகிய வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடந்துகொண்டிருக்கும் போது மாலை சுமார் 4.15 மணி அளவில் வாக்குச்சாவடிக்கு அருகே அதே பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளி வெங்கடேஷ் மற்றும் கார் ஓட்டுனர் கண்ணபிரான் ஆகிய இருவருக்கு தகராறு ஏற்பட்டதில் கண்ணபிரான் வெங்கடேசை கத்தியால் குத்தியுள்ளார். 

இதில் படுகாயம் அடைந்த வெங்கடேஷ் அணைகட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டு பின்னர் மேல்சிகிச்சைக்கா வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதனால் அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அப்பகுதியில் ஒருசில நிமிடம் மட்டுமே வாக்குப்பதிவு நின்ற நிலையில் தொடர்ந்து வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இது குறித்து வேலூர் மாவட்ட எஸ்.பி செல்வகுமார் கூறுகையில், “காயம் அடைந்த வெங்கடேஷும் தாக்கிய கண்ணபிரானும் அதே பகுதியை சேர்ந்தவர்கள். இருவரும் உறவினர்கள். இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்கெனவே தனிப்பட்ட முறையில் குடும்ப பிரச்னை தொடர்பாக முன்விரோதம் இருந்ததாகவும் அதன் தொடர்ச்சியாக இன்று பூத்துக்கு அருகே இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. 

பின்னர் மோதலாகி பேனா கத்தியால் வெங்கடேஷன் குத்தப்பட்டுள்ளார். இது தொடர்பாக அணைகட்டு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கத்தியால் குத்திய கண்ணபிரானை தேடி வருகின்றனர். மற்றபடி தேர்தலுக்கும் இவர்கள் மோதலுக்கும் சம்மந்தம் இல்லை” என கூறினார்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)