சொந்த கட்சி நிர்வாகியை கொலை செய்ய கடப்பாரையுடன் வந்த திமுக ஊராட்சி மன்ற தலைவர் : பின்னணியில் அமைச்சர்?!!

 


திண்டுக்கல்: செட்டியப்பட்டி ஊராட்சித் தலைவர் தூண்டுதலின் பேரில் திமுக பிரமுகர் கையில் கடப்பாரை யுடன் பொதுமக்களை தாக்க வந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டது செட்டியபட்டி ஊராட்சியில் முன்னாள் திமுக ஒன்றிய கவுன்சிலர் அனிதா மற்றும் அவரது கணவர் பொன்ராம் ஆகியோருக்கு சொந்தமான 7 செண்ட் இடம் உள்ளது. இந்நிலையில் செட்டியபட்டி ஊராட்சி மன்ற தலைவர் ராஜா மற்றும் அவரது அடியார்கள் பிரபு கார்த்திக் ஆகியோர் அமைச்சர் சொல்லியதாக கூறி கடப்பாரையை எடுத்து பொன்ராம் மற்றும் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் அனிதாவை கொலை செய்யும் நோக்கத்தோடு மிரட்டும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவிவருகிறது. திமுகவைச் சேர்ந்த அமைச்சர் சொல்லி உள்ளார் என கூறி ஊராட்சி மன்ற தலைவர் தூண்டுதலின் பெயரில் திமுக பிரமுகர் மணி என்பவர் பொதுமக்கள் முன்னிலையில் கடப்பாரையை கொண்டு தாக்க வந்தது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.