கிராமிய இசை பாடல்கள் மூலம் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி

 


ராணிப்பேட்டை பாலாறு ரோட்டரி சங்கம் சார்பாக கன்னியாகுமரியை சேர்ந்த  இசை பாடகர் கலைமாமணி பழனி பிள்ளை மற்றும் பாடகர் ராஜேந்திரன் ஆகியோர் தமிழ்நாடு முழுவதும் பயணம் செய்து கிராமிய இசை பாடல்கள் மூலம் பாடல்களைப் பாடி கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்  அதனடிப்படையில் ராணிப்பேட்டை வந்து சேர்ந்த இசைக்கலைஞர்களை ராணிப்பேட்டை  பாலாறு ரோட்டரி சங்க தலைவர் ஜெயக்குமார் சங்க செயலாளர் எம் சி கே தனசேகரன் ஆகியோர்  வரவேற்றனர் அதனைத் தொடர்ந்து  ராணிப்பேட்டை, முத்துக்கடை பேருந்துநிலையம் ஆகிய பகுதிகளில் கொரோனா விழிப்புணர்வு பாடல்களைப் பாடி

 


பொதுமக்களுக்கு நோய்தொற்று அபாயத்தை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர் இந்த நிகழ்ச்சிக்கு நகராட்சி ஆணையர் ஜெயராம ராஜா மற்றும் பாலாறு

 சங்க உறுப்பினர் ஞானப்பிரகாசம் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்டுகள், செல்போன் மூலம் எடுக்கும் வசதி அறிமுகம் - எப்படி டிக்கெட் எடுப்பது ? தெற்கு ரயில்வே விளக்கம்

நெல்லை : எஸ்.ஐ மார்க்கெட் தெரசா தாக்கப்பட்டாரா ........ அறுக்கப்பட்டாரா