’தமிழ்நாட்டை சிறந்த மாநிலமாக மாற்ற மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும்’- கிராம சபை கூட்டத்தில் முதல்வர் பேச்சு

 அண்ணல் காந்தியின் 153ஆவது பிறந்த நாளை முன்னிட்டு மதுரை மாவட்டம் பாப்பாப்பட்டியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். முதல்வராக பதவியேற்ற பின் முதல் முறையாக பாப்பாப்பட்டி கிராம சபை கூட்டத்தில் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல் தமிழக வரலாற்றில் ஒரு முதலமைச்சர் கிராம  சபை கட்டத்தில் கலந்துகொள்வது இதுவே முதல் முறை. மதுரை மாவட்டம், செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியம் பாப்பாபட்டி கிராமத்தில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் இன்று கலந்துகொண்டார். இதில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, முதல்வரின் தனி செயலாளர் உதயசந்திரன், மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர், பாப்பாப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் முருகானந்தம், ஊராட்சித் மன்றத் துணை தலைவர் லட்சுமி மற்றும் ஆயிரக்கணக்கான கிராம மக்கள் இக்கிராம சபை கூட்டத்தில் பங்கேற்றனர்,


’தமிழ்நாட்டை சிறந்த மாநிலமாக மாற்ற மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும்’- கிராம சபை கூட்டத்தில் முதல்வர் பேச்சு

பாப்பாப்பட்டி கிராமத்தை முதல்வர் நேரிடையாக தத்தெடுக்க வேண்டும், பாப்பாப்பட்டிக்கு இரு வழி சாலை அமைத்து தர வேண்டும், மக்களுக்கான நலத்திட்டங்கள் வழங்க வேண்டும், படித்த இளைஞர்கள் போட்டி தேர்வில் பங்கேற்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும், 58 கால்வாயை பாப்பாப்பட்டிக்கு நீட்டித்து தர வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்தனர். அப்போது பேசிய முதல்வர் அரசின் சார்பில் 4 ஆயிரம் ரூபாய் கொரோனா நிவாரண உதவிகள் வழங்கியது கிடைத்ததா?, தி.மு.க ஆட்சி உங்களுக்கு திருப்தியாக உள்ளதா?, இலவச பேருந்து போக்குவரத்து கிடைக்கிறதா? என கேட்டார், பாப்பாப்பட்டியை சேர்ந்த பெண் ஒருவர் பேசுகையில் பாப்பாப்பட்டியில் இருந்து மதுரைக்கு செல்வதற்கு பேருந்தில் டிக்கெட் வாங்கப்படுகிறது என கூறினார். இதற்கு பதில் அளித்து பேசிய முதல்வர் "இன்று முதல் மதுரைக்கு செல்வதற்கு பெண்கள் இலவச பேருந்து சேவை வழங்கப்படும் என கூறினார்.’தமிழ்நாட்டை சிறந்த மாநிலமாக மாற்ற மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும்’- கிராம சபை கூட்டத்தில் முதல்வர் பேச்சு

பின்னர் முதல்வர் மு.க.ஸ்டாலின் கிராம சபை கூட்டத்தில் பேசுகையில் "பாப்பாப்பட்டி மக்களை சந்திப்பது மிக மகிழ்ச்சியாக உள்ளது, கொரோனாவால் கிராம சபை கூட்டங்கள் 2 ஆண்டுகளாக நடத்த முடியவில்லை. நாட்டையே கிராம சபை ராஜ்ஜியமாக மாற்ற வேண்டும் என காந்தியடிகள் நினைத்தார். கிராமங்களில் வளர்ச்சியே இந்தியாவின் வளர்ச்சி. மதுரைக்கும் காந்தியடிகளுக்கும் நிறைய தொடர்புகள் உள்ளன. காந்தியடிகள் மதுரை மக்களின் நிலையை பார்த்து தான் மேலாடையை துறந்தார். காந்தியடிகள் மனதை மாற்றிய பகுதி தான் மதுரை, எல்லா மக்களும் நம்ம மக்கள் தான். மக்களுக்கான ஆட்சி தான் தமிழ்நாட்டில் நடைபெறுகிறது. மரபின் படி கிராமசபை கூட்டம் நடத்தப்படுகிறது. ஜனநாயகத்தை வலுப்படுத்த தேர்தலை நடத்தியே ஆக வேண்டும் என்ற முயற்சியில் தி.மு.க ஆட்சியில் பாப்பாப்பட்டியில் தேர்தல் நடத்தப்பட்டது. நீண்ட காலமாக நடத்த முடியாமல் இருந்த உள்ளாட்சி தேர்தலை 2006ஆம் ஆண்டு பாப்பாப்பட்டியில் நடத்தினோம். அசோக் வர்த்தன் ரெட்டி உதயசந்திரன் ஆகிய 2 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் தான் தேர்தலை நடத்த நடவடிக்கைகள் எடுத்தார்கள். இங்கு தேர்தல் நடத்தப்பட்டதை எண்ணி கலைஞர் மகிழ்ச்சி அடைந்தார். அதன்பின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு சமத்துவ பெருவிழாவில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.


’தமிழ்நாட்டை சிறந்த மாநிலமாக மாற்ற மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும்’- கிராம சபை கூட்டத்தில் முதல்வர் பேச்சு

சமத்துவ பெரியார் கலைஞர் என்ற பட்டத்தை திருமாவளவன் வழங்கினார் என்பது குறிப்பிடதக்கது. 2006 ஆம் ஆண்டு அரசின் சார்பில் 80 லட்ச ரூபாயும், தி.மு.க சார்பில் 20 லட்ச ரூபாயும் பாப்பாப்பட்டிக்கு நிதியுதவி வழங்கப்பட்டது. தமிழகத்தின் எத்தனையோ ஊராட்சி இருந்தாலும் பாப்பாபட்டியை தேடி வர இதுவே காரணம். சமத்துவம் தான் வளர்ச்சிக்கு காரணம் என கூறினார் கலைஞர், கிராமத்தில் நடைபெற்று வந்த குடவோலை தேர்வு முறை தான் தற்போது வாக்குபதிவு இயந்திரமாக மாறியுள்ளது. ஒற்றுமை இல்லாத ஊரில் சமத்துவம் வளராது, கடைகோடி மனிதனின் குரலையும் நான் கேட்ப்பேன், தி.மு.க அளித்த 505 தேர்தல் வாக்குறுதியில் 202 வாக்குறுதியை நிறைவேற்றி உள்ளோம். திமுக சொல்லாத வாக்குறுதியை கூட நிறைவேற்றி வருகிறது. தி.மு.க சாமானிய மக்களுக்கான ஆட்சியை நடத்தி வருகிறது. இது எனது அரசல்ல நமது அரசு, தமிழ்நாட்டில் வேற்றுமை இல்லாமல் ஒற்றுமையை உருவாக்க பாடுபடுவேன்.


’தமிழ்நாட்டை சிறந்த மாநிலமாக மாற்ற மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும்’- கிராம சபை கூட்டத்தில் முதல்வர் பேச்சு

பாப்பாப்பட்டியில் புதிய ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டப்படும். மேலும் அங்கன்வாடி கட்டடம், மயான கட்டடம், கதிர் அடிக்கும் களம், தெருவிளக்கு, மேல்நிலை நீர் தேக்க தொட்டி உள்ளிட்டவைகள் அமைக்கப்படும். பாப்பாப்பட்டியில் செய்யப்படும் வளர்ச்சி பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியரிடம் வாரம் ஒரு முறை நான் தொலைபேசி அல்லது வீடியோ கான்பிரன்ஸ் வழியாக விபரங்களை கேட்டு தெரிந்து கொள்வேன். சொன்னதும் சொல்லாததும் நிறைவேற்றப்பட்டுள்ளது. மீதியுள்ள வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவது எங்களின் கடமை, வேளாண்துறைக்கு தனி பட்ஜெட் முதன்முறையாக தாக்கல் செய்யப்பட்டது, வடமாவட்டம், தென்மாவட்டம் என வேற்றுமையின்றி செயல்படுவோம், தமிழகம் சிறந்த மாநிலமாக உருவாக மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும்" என கூறினார். வழிநெடுகே வந்த முதல்வர் வயல்வெளியில் விவசாயி பெண்களை சந்தித்து பேசினார்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)