ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்ட தென்காசி மாவட்ட காவல்துறையினர்


 தென்காசி மாவட்டம்,தென்காசி மாவட்டத்திலுள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.இதேபோல் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தலைமையிட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. கலிவரதன் அவர்களின் தலைமையில் மாவட்ட காவல் அலுவலகத்தில் பணிபுரியும் காவல்துறையினர் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் என அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

நமது நாட்டின் பொருளாதாரம், அரசியல் மற்றும் சமூக முன்னேற்றத்திற்கு ஊழல் ஒரு முக்கிய தடையாக உள்ளதாக நான் நம்புகிறேன். அரசு,குடிமக்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் ஆகியவை ஊழலை ஒழிக்க ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என நம்புகிறேன்.

நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் எப்போதும் உயர்ந்த நோக்குடன் விழிப்புணர்வு, நேர்மை மற்றும் கண்ணியம் ஆகியவற்றுடன் ஊழலை ஒழிப்பதில் உறுதுணையாக விளங்க வேண்டும் என்பதை நான் நன்கறிவேன்.

எனவே, நான்அனைத்து செயல்களிலும் நேர்மையும், சட்ட விதிகளையும் பின்பற்றுவேன் என்றும்,

லஞ்சம் வாங்கவோ கொடுக்கவோ மாட்டேன் என்றும்அனைத்து செயல்களையும் நேர்மை மற்றும் வெளிப்படைத் தன்மையுடன் செயல்படுத்துவேன் என்றும்

பொதுமக்களின் நலனுக்காக பணியாற்றுவேன் என்றும்தனிப்பட்ட நடத்தையில் நேர்மையை வெளிப்படுத்துவதில் முன்னுதாரணமாக செயல்படுவேன் என்றும்

ஊழல் தொடர்பான நிகழ்வினை உரிய அதிகாரம் அமைப்பிற்கு தெரியப்படுத்துவேன் என்றும் உறுதி கூறுகிறேன்.என்று உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்