சங்கர் ஜிவாலுக்கு டிஜிபி அந்தஸ்து - தமிழக அரசு உத்தரவு

 


சென்னை காவல்துறை ஆணையராக இருக்கும் சங்கர் ஜிவாலுக்கு டிஜிபி அந்தஸ்து வழங்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, சென்னை காவல்துறை ஆணையராக ஏடிஜிபி அந்தஸ்தில் இருந்த சங்கர் ஜிவால் டிஜிபியாக பதவி உயர்வு பெற்றுள்ளார். இருப்பினும் அவர் சென்னை காவல் ஆணையராக தனது பணியை தொடர்வார் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல ஏடிஜிபி அந்தஸ்தில் இருந்த ஏ.கே.விஸ்வநாதன் டிஜிபியாக பதவி உயர்வு பெற்றுள்ளார்.

அவர் தமிழ்நாடு வீட்டு வசதி கழகத்தின் தலைவராக தொடர்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆபாஷ் குமார், டி.வி.ரவிச்சந்திரன், சீமா அகர்வால். தற்போது அவருக்கு டிஜிபி பதவி உயர்வு அடைந்துள்ளனர். தமிழக அரசின் உத்தரவின்படி, ஐந்து ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு டிஜிபியாக பதவி உயர்வும், 4 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றமும்,2 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு கூடுதல் பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது.