நியாய விலைக் கடைகளில் பனை வெல்லம் விற்பனை: அரசாணை வெளியீடு

 


தமிழகத்தில் குறிப்பிட்ட நியாய விலைக் கடைகள் மற்றும் அமுதம் அங்காடிகளில் பனை வெல்லம் விநியோகம் செய்ய அனுமதி அளித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

 
நியாய விலைக் கடைகளில் பனை வெல்லம் விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சட்டப்பேரவையில் வேளாண்மைத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் அறிவித்திருந்தார். இந்நிலையில் கூட்டுறவுத் துறை செயலாளர் நசிமுதீன் வெளியிட்டுள்ள அரசாணையில், குடும்ப அட்டைதாரர்களை பனை வெல்லம் வாங்க கட்டாயப்படுத்தக் கூடாது என்றும், விருப்பத்தின் அடிப்படையில் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. பனை வெல்லத்தை 100 கிராம் முதல் ஒரு கிலோ வரை விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்டுகள், செல்போன் மூலம் எடுக்கும் வசதி அறிமுகம் - எப்படி டிக்கெட் எடுப்பது ? தெற்கு ரயில்வே விளக்கம்

நெல்லை : எஸ்.ஐ மார்க்கெட் தெரசா தாக்கப்பட்டாரா ........ அறுக்கப்பட்டாரா