தேனி:கூடலூர்:காவல் துறையினரின் அலட்சியத்தால் நகராட்சியில் அமைக்கப்பட்ட கேமராக்கள் பொது மக்களை பாதுகாக்கவா?மாறாக,நகரினில் நடமாடும் கள்வர்களை பாதுகாக்கவா?:
தேனி மாவட்டம்,கூடலூர் நகராட்சியின் ஆளுமைக்குட்பட்டு 21 வார்டுகள் உள்ளது.இவ் 21 வார்டுகளிலும் திருடு மற்றும் குற்றச் சம்பவங்களை தடுத்திடவும், கள்வர்களை கண்காணிக்கவும் காவல்துறை சார்பாக 20ற்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த வாரம் விவசாயி ஒருவர் தேவர் சிலை அருகில் உள்ள ஒரு உணவகத்தில் தனது மர அறுவை இயந்திரத்தினை உணவக வாயிலில் வைத்து விட்டு உணவருந்த சென்று விட்டு திரும்பி வந்து பார்க்கும் போது மர அறுவை இயந்திரம் அவ்விடத்தில் இல்லை.
வேர்வை சிந்திய பணத்தில் வாங்கிய இயந்திரம் காணாமல் பதறி போன விவசாயி
செய்வதறியாது திகைத்து நின்றார்.
கண்காணிப்பு கேமராவில் பதிவாயிருக்கும் பதட்டபடாமல் காவல் நிலையம் சென்று புகார் தொடுங்கள் என ஒரு சில சமூக நல ஆர்வலர்களின் அறிவுறுத்தலின் படி,அடுத்த கணமே விவசாயி கூடலூர் தெற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரையடுத்து,கூடலூர் தெற்கு காவல் நிலையத்தினர் இயந்திரத்தை பறிகொடுத்த விவசாயிக்கு கண்காணிப்பு கேமரா பழுதடைந்து விட்டதாகவும்,அதுசமயம், கண்டுபிடிக்க இயலாதெனவும் இயந்திரத்தை பறிகொடுத்த விவசாயிக்கு பதில் கூறி அனுப்பி வைத்தனர்.
இது குறித்து சமூக நல ஆர்வலரிடத்தில் முறையிட்ட போது,கூடலூர் நகரில் 20ற்கும் மேற்பட்ட கேமராக்கள் உள்ள நிலையில் இவையனைத்தும் குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு சாதகமாகவும்,சாமானிய ஏழை மக்கள்,சிறுவர்கள், பெண்கள் மற்றும் வியாபாரிகளுக்கு பாதகமாகவும் கடந்த பல மாதங்களாக கோமா நிலையில் இருந்து வருகிறதென காவல்துறையின் மீது ஆதங்கத்துடன் தனது கருத்தை பதிவு செய்தார்.
அதுசமயம்,கூடலூர் நகரினில் பிறிதொரு நாளில் பெரும் அசம்பாவிதங்கள் அரங்கேறுவதற்கு முன்பாக நகரினில் அமைக்கப்பட்ட அனைத்து கண்காணிப்பு கேமராக்களும் செயல்படுகிறதா, நல்ல நிலையில் உள்ளதா,என்பதை சம்பந்தபட்ட காவல்துறையினரும், மாவட்ட நிர்வாகத்தினரும் கண்காணிக்கப்பட வேண்டுமென முல்லை சாரல் சங்கத்தினரும், கூடலூர் வாழ் பொது மக்களும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.-நிருபர் வேப்பம்பட்டி சுகன்யா த.முரளிதரன்.....