தலைமை பொருளாதார ஆலோசகர் கே.வி சுப்பிரமணியம் ராஜினாமா!!

 


இந்தியாவிற்கான தலைமை பொருளாதார ஆலோசகர் கே.வி சுப்பிரமணியம் பதவியை ராஜினாமா செய்தார்.

பாஜக கூட்டணி அரசு பொறுப்பேற்றவுடன், நாட்டின் தலைமைப் பொருளாதார ஆலோசகராக கே.வி.சுப்பிரமணியன் 2014ஆம் ஆண்டு அக்டோபர் 16ஆம் தேதி 3 ஆண்டுகளுக்கு நியமிக்கப்பட்டார். இவரின் பதவி 2017 ஆம் ஆண்டு முடிந்த நிலையிலும் அவருக்கு ஒரு ஆண்டு பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டது. அவர் பதவிக்காலம் முடியும் நிலையில் முன்கூட்டியே ஜூன் மாதம் பதவி விலகினார். பிறகு அந்த பதவி காலியாக இருந்தது. இந்த நிலையில் புதிய தலைமை பொருளாதார ஆலோசகராக கே.வி.சுப்பிரமணியன் நியமிக்கப்பட்டார். 3 ஆண்டுகள் அவர் இந்த பதவில் நீடிப்பார் என மத்திய அரசு தெரிவித்தது. இன்று இந்திய தலைமைப் பொருளாதார ஆலோசகர் கே.வி.சுப்பிரமணியம் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள டிவீட்டில், என்னுடைய பணி காலத்தில் அரசிடம் இருந்து அதிகப்படியான ஒத்துழைப்பும், ஊக்கம் கிடைத்தது. பல உயர் அதிகாரிகளுடன் பணியாற்றி அனுபவம் வரமாக இருக்கிறது. கடந்த 30 வருட பணி காலத்தில் பிரதமர் மோடியை போல் தலைவரை நான் பார்த்து இல்லை என தெரிவித்துள்ளார்.மேலும் மேலும் கேவி சுப்பிரமணியன் மத்திய நிதியமைச்சரான நிர்மலா சீதாராமன் பலமுக்கியமான விஷயத்தின் அவர்களின் அறிவுறைக்கும் நன்றி தெரிவித்துள்ளார். மீண்டும் கல்வி, ஆராய்ச்சி, போன்ற விஷயங்களில் தன்னுடைய நேரத்தை செலவிட இருப்பதால் அவர் நிதி அமைச்சரின் பொறுப்பிலிருந்து விலகிக் கொண்டு புதிய பணியை மீண்டும் மேற்கொள்கிறார்.