ஆற்காடு அருகே அரசு பேருந்தின் மீது வேன் மோதியதில் இரண்டு பெண்கள் உள்ளிட்ட 5 பேருக்கு படுகாயம்
அரசு பேருந்து நம்பர்.36 ஆற்காட்டிலிருந்து சக்கரமல்லூர் வழியாக நாட்டேரிக்கு
கிராமத்திற்குச் சென்று சுமார் 4 மணி அளவில் திரும்பி ஆற்காடு நோக்கி வந்துகொண்டிருந்தபோது புதுப்பாடி ஏரிக்கரை நெடுஞ்சாலையைநெருங்கும்போது
ஆற்காட்டிலிருந்து 6க்கும் மேற்பட்ட கேஸ் சிலிண்டர்களை ஏற்றிக்கொண்டு புதுபாடியை நோக்கி தோஸ்த் மினி வேன் அதி வேகமாக வந்து மோதியதில் மினிவேன் நொறுங்கி வேனில் இருந்த டிரைவர், கிளீனர் இருவருக்கும் கால் முறிவு ஏற்பட்டது
மேலும் அரசுப் பேருந்து ஓட்டுனர் சக்கரமல்லூர் கன்னிகாபுரத்தை சேர்ந்த சரவணன் என்பவருக்கு கால் முறிவு ஏற்பட்டது பேருந்தில் பயணம் செய்த இரண்டு பெண்களுக்கு கால் மற்றும் முகத்தில் காயம் ஏற்பட்டது
இவர்களை அங்குள்ள பொதுமக்கள் மீட்டு 108 ஆம்புலன்சில் ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர் இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.