வாலாஜா பேருந்து நிலையத்தில் ஆட்டோ ஓட்டுனர்கள் 18- வது வருஷம் ஆயுத பூஜை கொண்டாட்டம்

 


இந்த நிகழ்ச்சிக்கு சங்கத் தலைவர் குமரேசன் தலைமை  தாங்கினார்   ஆட்டோ சங்க துணைத்தலைவர் நாராயணன், செயலாளர் செந்தில்,  முன்னாள்ஆட்டோ சங்க  தலைவர் பாபு, நரசிம்மன்,பல்பு சுரேஷ், தர்மா சுரேஷ்  ஆகியோர் முன்னிலை வகித்தனர் இந்த நிகழ்ச்சியில் 300-க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள்அலங்காரம் செய்யப்பட்டு மேள தாள வாத்தியங்களுடன் 500க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுனர்கள் படைசூழ வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது  அதனைத் தொடர்ந்து 500க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு மதிய உணவு மற்றும் இனிப்பு வழங்கினர்


இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக அதிமுக நகர அமைப்பாளர் முரளி எக்ஸ் எம்சி,  பிஜேபி ராணிப்பேட்டை மாவட்ட  இளைஞரணி செயலாளர் 

மா.சதீஷ்குமார், ஆர் ஐ டி அறக்கட்டளை மாநிலத்தலைவர் குப்பன், ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர் 

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் தலைவர் குமரேசன் மற்றும் செயலாளர்  செந்தில் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்