பட்டா மாறுதலுக்கு லஞ்சம் வாங்கிய VAO : சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ!!!

 


கன்னியாகுமரி மாவட்டம் சூழால் கிராம நிர்வாக அதிகாரி பட்டா போக்குவரவு செய்ய ரூ.1000 லஞ்சம் வாங்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரவி வருகிறது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கிராம நிர்வாக அதிகாரி ஒருவர் லஞ்சம் வாங்கும் காட்சி வைரலாகி வருகிறது. நிலத்திற்கு போக்குவரவு செய்ய சென்ற ஒருவரிடம் 2000 கேட்கும் கிராம நிர்வாக அதிகாரி ராஜேஷிடம், நில உரிமையாளர் 1000 ரூபாய் கொடுப்பதும், அதனைப் பெற்றுக் கொண்ட பிறகு 15 நாட்களில் பட்டா மாறுதல் கிடைக்கும் எனவும் அதிகாரி கூறுகிறார்.

இந்த காட்சியை தனது மொபைலில் பதிவு செய்து நில உரிமையாளர் வெளியிட்ட நிலையில், சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதனால் சம்பந்தப்பட்ட அதிகாரி மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.