நின்ற வாகனத்திற்கு பூட்டு… காவலர் எனப் பாராமல் அதிகார தோரணையில் வசைபாடிய VAOக்கு வேட்டு..!!
கும்பகோணத்தில் சாலையில் நோ பார்க்கிங்கில் நிறுத்திய காரை லாக் செய்த போக்குவரத்து போலீசாரை, ஒருமையில் திட்டி பேசிய கிராம நிர்வாக அலுவலர் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
கும்பகோணம் – தஞ்சை நெடுஞ்சாலை ஆயிகுளம் பகுதியில் நேற்று மாலை திருவிடைமருதூர் அருகே உள்ள பவுன்ரீகபுரம் கிராம நிர்வாக அலுவலராக உள்ள சுரேஷ் என்பவர் நோ பார்க்கிங்கில் காரை நிறுத்தி விட்டு அருகில் உள்ள ஓட்டலுக்கு சாப்பிட சென்றுள்ளார். அப்போது போக்குவரத்தை சீர் செய்து கொண்டிருந்த போக்குவரத்து ஆய்வாளர் சரவணன், No Parking பகுதியில் நிறுத்தி இருந்த கிராம நிர்வாக அலுவலரின் காரை எடுக்காதவாறு சக்கரத்தை லாக் செய்து விட்டு சென்று விட்டார்.
இதையெடுத்து சாப்பிட்டு விட்டு திரும்பி வந்த கிராம நிர்வாக அலுவலர் சுரேஷ் கார் டயரை போலீசார் பூட்டி இருப்பதை கண்டு ஆத்திரமடைந்து
அந்த வீடியோவில் கிராம நிர்வாக அலுவலர் சுரேஷ் எஸ்பிஐ வேண்டுமானாலும் வரச்சொல் பார்த்துக் கொள்ளலாம் எனத் தகாத வார்த்தையில் திட்டியதுடன், நிமிடத்தில் என்னுடைய வண்டி லாக்கை எடுக்கவில்லை என்றால், தானாக எடுக்க வைப்பேன் என அதிகார தோரணையில் வீராப்பாக பேசி, அங்கு விசாரணைக்கு வந்த காவலரின் இரு சக்கர வாகனத்தின் சாவியை பிடுங்கி எரிந்துள்ளார்.
இதுகுறித்து கும்பகோணம் போக்குவரத்து ஆய்வாளர் சரவணன் தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், எஸ்பி ரவளிபிரியா, கும்பகோணம் வட்டாட்சியர் ஆகியோரிடம் கிராம நிர்வாக அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் அளித்துள்ளார்.