சூறைக்காற்றில் ராட்சச காற்றாடி முறிந்து விழுந்து விபத்து : பற்றி எரிந்த தீயை அணைத்த தீயணைப்புத்துறையினர்..!!

 


கன்னியாகுமரி: குமரியில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வரும் நிலையில், மாவட்ட எல்லை பகுதியான அவரை குளத்தில் இன்று பலத்தகாற்றால் காற்றாடி ஒன்று முறிந்து கீழே விழுந்தது தீ பற்றி எரிந்தது.

குமரி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக சூறைக்காற்றுடன் தொடர்மழை பெய்து வருகிறது. இந்நிலையில் மாவட்டத்தின் எல்லை பகுதியாக விளங்கும் பழவூர் அருகே உள்ள ஆவரைகுளத்தில் காற்றின் வேகம் அதிகமாக இருந்தது. தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான 600 கிலோவாட் திறன் கொண்ட காற்றாலை முறிந்து விழுந்து தீப்பிடித்து எரிந்தது. இதனையடுத்து அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து தீயை அணைத்து வருகின்றனர்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்டுகள், செல்போன் மூலம் எடுக்கும் வசதி அறிமுகம் - எப்படி டிக்கெட் எடுப்பது ? தெற்கு ரயில்வே விளக்கம்

நெல்லை : எஸ்.ஐ மார்க்கெட் தெரசா தாக்கப்பட்டாரா ........ அறுக்கப்பட்டாரா