வஞ்சித் பகுஜன் அகாடி மாநில மாவட்ட பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம்

 


தமிழக வஞ்சித் பகுஜன் அகாடி கட்சியின் மாநில மாவட்ட பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் மாநில ஒருங்கிணைப்பாளர் அலந்தலை எம்.தங்கராஜ்  தலைமையில் வாலாஜாபேட்டை எம் பி டி  சாலையில் அமைந்துள்ள  தங்க ராஜ் பேலஸ்  மண்டபத்தில் நடைபெற்றது இந்தக் கூட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்

இந்த நிகழ்ச்சியில் தமிழ் மாநில குழு உறுப்பினர்கள் டி.ரவி,எம்.சம்பத்குமார்,

 கே.கன்னியப்பன், சௌந்தரபாண்டியன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்  

மேலும் இந்த நிகழ்ச்சியில் புதிய மாவட்ட மாநில நிர்வாகிகள் தேர்ந்தெடுத்தனர்  ராணிப்பேட்டை மாவட்ட தலைவராக ராஜசேகரன், தென்சென்னை மாவட்ட தலைவராக கே.பி கதிரவன்,செங்கல்பட்டு மாவட்ட தலைவராக பாக்கியநாதன், காஞ்சிபுரம் மாவட்ட தலைவராக குமரேசன்,

 


திருவண்ணாமலை மாவட்ட தலைவராக ஜெயமூர்த்தி, திண்டுக்கல் மாவட்ட தலைவராக சௌந்தரபாண்டியன், விழுப்புரம் மாவட்ட தலைவராக நீல புலி சத்தியா, வடசென்னை மாவட்ட தலைவராக கே பார்வதி  ஆகியோரை மாநில மாவட்ட பொறுப்பாளர் கூட்டத்தில் அறிமுகம் செய்து வைத்தனர் 

அதனைத் தொடர்ந்து பேசிய மாநில ஒருங்கிணைப்பாளர்  அலந்தலை 

எம்.தங்கராஜ் பேசுகையில்  அகில இந்திய தலைவர் பாபாசாகிப் பிரகாஷ் அம்பேத்கர்ஆணைக்கிணங்க நிர்வாகிகள் தேர்ந்தெடுத்து அறிமுகம் செய்து வைத்திருக்கிறோம்

 தமிழகத்தில் நடைபெற உள்ள ஒன்பது மாவட்ட உள்ளாட்சி தேர்தலில் நம்முடைய கட்சியின் சார்பாக போட்டியிட்டு வெற்றி பெறுவதற்கு கட்சி உறுதுணையாக இருக்கும் விருப்பம் உள்ள நபர்கள் அந்தந்த பகுதியில் வேட்புமனு தாக்கல் செய்து போட்டியிட்ட கேட்டுக்கொள்கிறேன் என்றார் 

மேலும் அவர் பேசுகையில் கட்சியின் ஒவ்வொரு பொறுப்பாளர்களும் மாநில மாவட்ட ஒன்றிய நகர கிளை வாரியாக பொறுப்பாளர்களை தேர்ந்தெடுத்து கட்சியை கட்டமைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்