திமுகவின் அதிகாரப்பூர்வ ஆங்கில இதழ்: ‘தி ரைசிங் சன்’ வெளியீடு!

 


திமுக தலைவர் மாண்புமிகு தமிழக முதல்வர் ஸ்டாலின் தி ரைசிங் சன் இதழின் வெளியிட்ட முதல் பிரதியை துரைமுருகன் பெற்றுக்கொண்டார். மாதம் இரு முறை வெளி வரும் இவ்விதழின் பதிப்பாளராக உதயநிதி ஸ்டாலினும் ஆசிரியராக ஜே.கான்ஸ்டன்டைன் ரவீந்திரனை கொண்டு இதழ் வெளிவர இருக்கிறது.

திமுகவின் அதிகாரப்பூர்வ ஆங்கில இதழான ‘தி ரைசிங் சன்’ஐ சென்னையில் திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

திமுகவின் கருத்துகளை பிற மாநிலத்தவர் அறிந்து கொள்ள கடந்த 1971ஆம் ஆண்டு சென்னையில் ‘தி ரைசிங் சன்’ எனும் ஆங்கில இதழ் தொடங்கப்பட்டது. முரசொலி மாறனை ஆசிரியராகக் கொண்டு தொடங்கப்பட்ட அந்த ஆங்கில வார இதழ், பல்வேறு காரணங்களால் 1975ஆம் ஆண்டில் நிறுத்தப்பட்டது.

இதையடுத்து, கடந்த 2005ஆம் ஆண்டு மீண்டும் அப்போதைய திமுக தலைவரான கருணாநிதியால் மீண்டும் ‘தி ரைசிங் சன்’ தொடங்கப்பட்டு பின்னர் நிறுத்தப்பட்டது.இந்த நிலையில், 10 ஆண்டுகள் கழித்து தமிழகத்தில் திமுக மீண்டும் ஆட்சிப் பொறுப்பேற்றுள்ளது

தேசிய அரசியலில் தவிர்க்க முடியாத ஆளுமையாகவும் மாநிலக் கட்சியான திமுக மாறியுள்ளது. அதன் தொடர்ச்சியாக, திமுகவின் கொள்கைகளை, திமுக அரசின் செயல்பாடுகளை பிற மாநிலத்தவர், வெளிநாட்டினர் அறிந்து கொள்ளும் வகையில், அக்கட்சியின் அதிகாரப்பூர்வ ஆங்கில நாளேடான ‘தி ரைசிங் சன்’-இதழ் இன்று மாலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் நம் மாண்புமிகு தமிழக முதல்வர்  ஸ்டாலின் வெளியிட்டார் 

திமுக தலைவர் ஸ்டாலின்  அவர்கள் வெளியிட்ட முதல் பிரதியை துரைமுருகன் பெற்றுக்கொண்டார். மாதம் இரு முறை வெளி வரும் இவ்விதழின் பதிப்பாளராக உதயநிதி ஸ்டாலினும் ஆசிரியராக ஜே.கான்ஸ்டன்டைன் ரவீந்திரனை கொண்டு இதழ் வெளிவர இருக்கிறது.இந்த நிகழ்ச்சியில் கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, உதய்நிதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)