சிறுவனின் ஆண் உறுப்பை கடித்த நாய்கள் - ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை
தஞ்சை மாவட்டம், திருவையாறு தாலுக்கா, கருப்பூர் கிராமத்தில் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த விவசாயி சதீஷ்குமார்-வினோதா. இவர்களுக்கு சஷ்மிதா (5), பெண் குழந்தை உள்ளனர். இந்நிலையில் சஷ்மிதா தெருவில் விளையாடி கொண்டிருந்த போது அவ்வழியாக நாயே ஆடுகளை விரட்டி கொண்டு வந்தது. நாய்கள் தெருவில் வருவது அறியாமல் சஸ்மிதா, விளையாடி கொண்டிருந்தார். ஆடுகளை கடிப்பதற்காக வெறியுடன் வந்த நாய்கள், சஷ்மிதாவை, முகம் மற்றும் தாடையில் கொடூரமாக கடித்து, சதைகளை பற்றி கொண்டது. மற்ற நாய்கள் குழந்தையின் பின்புறத்தை கடித்தது. சஷ்மிதா வலியினால் கூச்சலிட்டதால், சத்தம் கேட்டு அவரது பெற்றோர்கள் வந்து பார்த்தபோது நாய், அச்சிறுமியை கன்னத்திலும், பின்புறத்திலும் சதையை கடித்து கொண்டிருப்பதை பார்த்ததும், அந்த நாயை அடித்து விரட்டி விட்டனர்.
கோப்புப்படம்
உடனடியாக குழந்தை சஷ்மிதாவை, தஞ்சாவூர் ராசா மிராசுதார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டுவந்தனர். இதே போல் அதே பகுதியை சேர்ந்த அரசு என்ற சிறுவன் சிறுநீர் கழிப்பதற்காக வீட்டின் பக்கத்தில் உள்ள சந்துக்கு சென்றார். அப்போது அவ்வழியாக வெறி பிடித்தது போல் வந்த நாய், சிறுநீர் கழித்து கொண்டிருந்த போது, அவரது பிறப்புறுப்பை சுற்றி கடித்தது. இதில் ஓரத்திலுள்ள சதைகள் பிய்ந்தது. வலியால் துடித்து, கதறிய அரசை உடனடியாக, உறுவினர்கள் நாயை விரட்டி விட்டு , தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர் பின்னர் இருவரையும் ராசாமிராசுதார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக கருப்பூர் கிராமத்தில் நாய்கள் தொல்லை அதிகரித்து வருவதாகவும், நாய்கள் கூட்டமாக வந்து, ஆடு மாடு கோழி என கடித்து குதறி வந்த நிலையில், தற்போது குழந்தைகளை கடித்து குதறி வருகின்றன. இதனால் பெற்றோர்கள் தங்கள் குழந்தையை வீட்டிற்கு வெளியே அனுப்பிய முடியாமல் தவித்து வருகின்றனர். தற்போது பள்ளிகள் திறந்துள்ள நிலையில் குழந்தைகள் நிலை கேள்விக்குறியாகியுள்ளது. இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த வீரராஜேந்திரன் மற்றும் சமூக சுகுமாரன் ஆகியோர், தஞ்சை மாவட்ட ஆட்சி கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலீவருக்கு, சுமார் ஒரு மாதத்துக்கு முன்பு தங்கள் வாட்ஸ்அப் குரூப்பில் ஆடியோ மற்றும் மெசேஜ் அனுப்பி உள்ளார். ஆனால் தெருநாய்கள், தொடர்பாக மாவட்ட நிர்வாகம் மற்றும் திருவையாறு ஊராட்சி நிர்வாகம் இதுவரை எந்த ஒரு நடவடிக்கை எடுக்கவில்லை. மாவட்ட நிர்வாகத்தின் அலட்சியத்தால் தற்போதைய நிலை மிகவும் மோசமாக உள்ளது.
அரசு அதிகாரிகளிடம் புகாரளித்தால், நாய்களை பிடித்தால், புளு கிராஸ் அமைப்பு மற்றும் விலங்குகள் நல வாரியத்திற்கு பதில் கூற வேண்டியிருக்கும் என பதில் கூறுகின்றார்கள். எனவே, மாவட்ட நிர்வாகம் நாய்களை பிடிப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் அப்பகுதியில் உள்ள நிலை மிகவும் மோசமாகி விடும். ரவுடிகளை போலீசார் சுட்டுக்கொல்வது போல், வெறி பிடித்த நாய்களையும் சுட்டுத்தள்ளனும். மேலும், கருத்தடை செய்யலாம், நாய்களை பிடித்து சென்று ஆதரவற்ற நாய்களை பராமரிக்கும் அமைப்பினரிடம் ஒப்படைக்கலாம். தவறும் பட்சத்தில் கரூப்பூர் மற்றும் சுற்றுப்பகுதி கிராமத்தில் உள்ள குழந்தைகளின் நிலை கேள்வி குறியாகியுள்ளது என்றனர்.