‛பரிந்துரை கடிதம் கேட்டு யாரும் வரவேண்டாம்’ - வீட்டில் அறிவிப்பு ஒட்டிய அமைச்சர்!

 


தமிழ்நாட்டில் திமுக ஆட்சி பொறுப்பு ஏற்ற பிறகு அனைத்து துறைகளிலும் ஊழல் இல்லாமல் அனைத்து பணிகளும் வெளிப்படையாக நடைபெறும் என்று முதல்வர் தெரிவித்து இருந்தார். அதன்படி அனைத்து அமைச்சர்களும் அவர்களின் துறைகளில் வெளிப்படையாகவும், நேர்மையாகவும் செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். அரசு பணி இடங்களை நிரப்புதல், டெண்டர் விடுதல், துறை சார்ந்த பணிகளை மேற்கொள்ளுதல், போன்ற எந்த ஒரு பணிகளையும்  நேர்மையான முறையிலேயே மேற்கொள்ள வேண்டும். அதே போன்று அரசு பணிகளில் சேருவதற்கு யாரும் சிபாரிசு செய்யக் கூடாது, தேர்வு எழுதி நேர்மையான முறையில் அரசுப் பணிகளில் தேர்வாக வேண்டும் என்று முதல்வர் கூறியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதன்படி கடந்த ஜூன் 25ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் 38 மாவட்ட நீதிமன்ற வேலை வந்தாச்சு 3557 காலியிடம் அறிவிப்பு வெளியானது. 



நீதிமன்ற பணி நியமனம்: ‛பரிந்துரை கடிதம் கேட்டு யாரும் வரவேண்டாம்’ - வீட்டில் அறிவிப்பு ஒட்டிய அமைச்சர்!


 இந்த அறிவிப்பின் படி காலிபணியிடங்கள் :அலுவலக உதவியாளர் – 1911,அலுவலக உதவியாளர் மற்றும் முழுநேர காவலர் மற்றும் முழுநேர காவலர் – 1, நகல் பிரிவு அலுவலர் – 3, சுகாதார பணியாளர் -110, தூய்மை பணியாளர் – 6, தூய்மை பணியாளர் / துப்புரவு பணியாளர் -17 ,தூய்மை பணியாளர் / சுகாதார பணியாளர் -1, தோட்டக்காரர் -28, காவலர் – 496, இரவு காவலர் -185, இரவு காவலர் மற்றும் மசாலஜி – 15 ,துப்புரவு பணியாளர் -189, துப்புரவு பணியாளர் மற்றும் தூய்மை பணியாளர் -1,வாட்டர்மேன் / வாட்டர்வுமன் -1, மாசலஜி -485 ,மொத்தம் காலிபணியிடங்கள் : 3557 என தெரிவிக்கப்பட்டு இருந்தது.


நீதிமன்ற பணி நியமனம்: ‛பரிந்துரை கடிதம் கேட்டு யாரும் வரவேண்டாம்’ - வீட்டில் அறிவிப்பு ஒட்டிய அமைச்சர்!


நீதிமன்ற பணியாளர்கள் நியமனம் தொடர்பாக பரிந்துரை கடிதம் கோரி யாரும் வரவேண்டாம், என சட்டத்துறை அமைச்சர் ரகுபதியின் வீட்டு வாசலில் அறிவிப்பு ஒட்டப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள கீழ்மை நீதிமன்றங்களில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர், நகல் பிரிவு அலுவலர், சுகாதாரப் பணியாளர், துப்புரவு பணியாளர், தோட்டக்காரர், தண்ணீர் ஊற்றுபவர் ,காவலாளி, போன்ற பணியிடங்களுக்கு 3,557 பேரை தேர்வு செய்வதற்கு கடந்த மாதம் எழுத்துத் தேர்வு நடந்தது. பல ஆயிரக்கணக்கானோர் இந்த தேர்வை எழுதினார்கள். இந்நிலையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதியிடம்  பரிந்துரை கடிதம் பெற்று நீதிமன்ற பணியாளர் வேலையை பெறுவதற்கு நேரடியாகவும், கட்சி பிரமுகர்கள் சிபாரிசுடனும் பலர் முயற்சி செய்கின்றனர். தன்னிடம் யாரும் பரிந்துரை கடிதம் கேட்டு வர வேண்டாம், நீதிபதிகளை உள்ளடக்கிய தேர்வு குழுவினரே பணியாளர்களை தேர்வு செய்கின்றனர். என அமைச்சர் ரகுபதி தரப்பில் கூறப்பட்டுள்ளது புதுக்கோட்டை கீழ இரண்டாம் வீதியில் உள்ள அமைச்சர் ரகுபதி வீட்டின் முன்பு உயர் நீதிமன்ற வேலை குறித்து அமைச்சரை சந்திக்க யாரும் வர வேண்டாம் என்ற அறிவிப்பும் ஒட்டப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தேர்வு எழுதியுள்ளவர்களின்  தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணிகள் வழங்கப்படும் என தமிழக  சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்