கிணற்றில் மிதந்த ஆண், பெண் சடலம் : உல்லாச பயணத்தால் விபரீதம்.. பறிபோன கள்ளக்காதல் ஜோடியின் உயிர்!!
ஈரோடு : கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள மேவானியில் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்ட திருப்பூரை சேர்ந்த கள்ளக்காதல் ஜோடிகளின் சடலங்களை மீட்டு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே மேவானி பகுதியில் ஒரு விவசாயி தோட்டத்தின் கிணற்றில் பெண்ணின் சடலம் ஒன்று மிதப்பதாக கோபி காவல்துறையினருக்கு கிடைத்தது.
அதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் மீட்பு பணிக்காக தீயணைப்பு துறையினருடன் இணைந்து விவசாய கிணற்றி மிதந்த பெண் சடலத்தை மீட்டனர்.
இது குறித்து கோபிசெட்டிபாளையம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் கிணற்றில் மிதந்த பெண் திருப்பூர் ஆத்துபாளையத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவரது மனைவி தங்கமணி என்பது தெரிய வந்தது.
மேலும் கிணற்றில் இறந்து போன தங்கமணியுடன் ஆண் நண்பர் ஒருவர் வந்ததாக அந்த பகுதி மக்கள் தெரிவித்த தகவலின் அடிப்படையில் தீயணைப்பு வீரர்கள் மீண்டும் கிணற்றில் தேடும் பணியை தொடங்கினர்
அப்போது 50 அடி ஆழமுள்ள கிணற்றில் நீண்ட நேர தேடுதலுக்கு பிறகு கீழ் பகுதியில் மேலும் ஒரு ஆண் சடலத்தையும் கண்டெடுத்தனர். இரு சடலங்களையும் கைப்பற்றிய போலீசார் தொடர்ந்து நடத்திய விசாரணையில் சடலமாக மீட்கப்பட்ட தங்கமணி திருப்பூர் ஆத்துபாளையத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன் மனைவி என்பதும் இவருக்கு 22 வயதில் பிரபாகரன் என்ற மகனும், 17 வயதில் செல்வி என்ற மகளும் உள்ளார் எனவும் தெரியவந்துள்ளது.
தங்கமணி, வேலம்பாளையத்தை சேர்ந்த பழனிச்சாமியின் மகன் அஸ்வின் என்பவரது கார்மெண்ட்ஸ் நிறுவனத்தில் வேலை செய்து வந்ததாகவும் இதில் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு ,நாளடைவில் கள்ளக்காதலாக மாறியதை அறிந்த இவர்களது உறவு இருவரின் குடும்பத்திற்கு தெரிந்ததும் எதிர்ப்பு கிளம்பியது.
அதைத்தொடர்ந்து இருவரும் நேற்று வீட்டை விட்டு வெளியேறி கோபி அருகே உள்ள மேவானியில் பகுதியில் விஷம் குடித்துவிட்டு இருவரும் அருகே இருந்த கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக விசாரணையில் தெரியவருகிறது,
தொடாந்து இருவரது உடலையும் மீட்ட கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோனைக்கான அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து கோபிசெட்டிபாளையம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.