புதிய திட்டங்கள்: முதலமைச்சரின் அசத்தலான அறிவிப்புகள்!

 


தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2020-21ம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. கடைசி கூட்டத்தொடரான இன்று காவல்துறை மீதான மானிய கோரிக்கையில் முக்கிய அறிவிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

அதில், காவல்துறையினருக்கும் பொதுமக்களுக்கும் இடையிலான தொடர்பை மேம்படுத்துதல் தொடர்பாக அறிவிக்கப்பட்டதன் விவரம் பின்வருமாறு:

காவல் நிலையங்களுக்கு வரும் பொதுமக்களை இன்முகத்தோடு வரவேற்று அவர்களின் குறைகளை கனிவோடு கேட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள ஒவ்வொரு காவல் நிலையத்திலும் வரவேற்பாளர்கள் நியமிக்கப்படுவார்கள். இதற்காக பல ஆண்டுகளாக காத்திருக்கும் மறைந்த காவலர்களின் பாதிப்புகள் 1132 பேர் கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்கப்படும். இந்தப் பணிகளுக்காக கணினிகள் மற்றும் மென்பொருட்கள் புதிதாகக் கொள்முதல் செய்யப்படும் இதற்கான மொத்த தொடர் செலவினம் 33 கோடி ஆகும்.

பொது மக்களோடு தொடர்பு கொள்ளும் திறனை மேம்படுத்த ஒரு லட்சத்து இருபதாயிரம் பேருக்கு ரூ.10 கோடி செலவில் சென்னை அண்ணா மேலாண்மை மையத்தின் மூலம் பயிற்சி வழங்கப்படும். மீனவ இளைஞர்கள் இந்திய கடற்படையில் ஒப்பந்த அடிப்படையில் சேரும் விதமாக அவர்களுக்கு கடலோர காவல்படை குடும்பம் மூலம் ரூபாய் 90 லட்சம் செலவில் ஆறு மாத பயிற்சி வழங்கப்படும். இப்பயிற்சியின் மூலம் இளைஞர்கள் மற்ற இந்திய பாதுகாப்பு பணியில் சேரவும் வாய்ப்பு அதிகரிக்கும்.

கடலோர பாதுகாப்பு காவல் படையினருடன் இணைந்து பணிபுரிய ஆயிரம் மீனவ இளைஞர்கள் ஊர்காவல் படையினராக பணியமர்த்தப்படுவர். இதற்கான மொத்த செலவு ரூபாய் 3 கோடியே 40 லட்சம் ஆகும். காவலர் பொதுமக்களுக்கு இடையேயான உறவை மேம்படுத்தவும் காவல் துறை பணியாளர்களின் நலனை கருத்தில் கொண்டு அவர்களுக்கு தேவையான திட்டங்களையும் புதிய பயிற்சி முறைகளையும் பரிந்துரைக்கும் நோக்கத்துடன் காவல் ஆணையம் ஒன்று மீண்டும் அமைக்கப்படும்.

போலிஸுக்கும் பொதுமக்களுக்குமான தொடர்பை மேம்படுத்த புதிய திட்டங்கள்: முதலமைச்சரின் அசத்தலான அறிவிப்புகள்!

சென்னை மாநகரில் மண்டல அளவில் நான்கு சைபர் குற்ற காவல் நிலையங்கள் அமைக்கப்படும். இதற்கென மறுவிநியோக முறையில் தேவையான பணியாளர்கள் பயன்படுத்தப்படுவர். பொதுமக்கள் காவல் உயர் அதிகாரிகளை இணையதள காணொளி மூலம் சந்தித்து புகார் அளிக்கும் வசதி அறிமுகப்படுத்தப்படும். இதனால் உயர் அதிகாரிகளை பார்க்க பயணம் மேற்கொள்ளவும் அலுவலகங்களில் காத்திருக்க வேண்டிய அவசியம் இருக்காது.

பொது மக்களின் பிரச்சினைகளை காவல் நிலைய அதிகாரியிடம் தெரிவிக்க ஒரு கைபேசி செயலி உருவாக்கப்படும். காவல் நிலைய அதிகாரி விசாரணை அறிக்கை அந்த செயலியில் தரவேற்றம் செய்யப்படும். வெளிநாடுகளில் வாழும் இந்திய குடிமக்களின் குறைகளை களைய காவல்துறை தலைமை இயக்குனர் அலுவலகத்தில் தனிப்பிரிவு அமைக்கப்படும். இணையத்தின் மூலம் பதிவு செய்யப்படும் புகார்கள் மீது உரிய விசாரணை செய்யவும் அவர்களுக்கு விசாரணை முடிவுகளை தெரிவிப்பதும் இப்பிரிவின் வேலையாக இருக்கும்.

சுற்றுலாத் தலங்களில் பொதுமக்களுக்கு பாதுகாப்பும் வழிகாட்டுதலும் வழங்க சுற்றுலா காவல்துறை அமைக்கப்படும். சுற்றுலா காவல் துறையினருக்கு தனி பயிற்சி வழங்கப்படும்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)