கோடநாடு தனியார்வசம் போன பிறகு பாதுகாப்பு எப்படி கொடுக்க முடியும்..? இபிஎஸ் – முதலமைச்சர் ஸ்டாலின் காரசார வாதம்..!!
இன்றைய சட்டப்பேரவைக் கூட்டத்தின் போது , கோடநாடு வழக்கு விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலினுக்கும், எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே காரசார விவாதம் நடைபெற்றது.
அப்போது, சட்டப்பேரவை நிகழ்ச்சிகள் நேரலை செய்யப்படும் என திமுக அளித்த தேர்தல் வாக்குறுதி தொடர்பாக எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த முதலமைச்சர் ஸ்டாலின், செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் சட்டப்பேரவை கூடும் போது நேரலை செய்யப்படும் என உறுதியளித்தார்.
இதைத் தொடர்ந்து, அதிமுக ஆட்சியில் கட்டப்பஞ்சாயத்து ஏதும் நடைபெறவில்லை எனக் கூறினார். இதற்கு தூத்துக்குடி சம்பவம் அதிமுக ஆட்சியில்தான் நடந்தது என அமைச்சர் துரைமுருகன் பதிலளித்துக் கொண்டிருக்கும் போது, முதலமைச்சர் ஸ்டாலின் குறுக்கிட்டு பேசினார்.
அதாவது, நீங்கள் முதலமைச்சராக இருக்கும் போதுதான், கோடநாடு கொலை மற்றும் கொள்ளை சம்பவம் நடந்ததாகக் கூறினார். மேலும், கொலை, கொள்ளை நடந்த கோடநாடு சாதரண இடமில்லை என்றும், சம்பவம் நடந்த போது ஏன் சிசிடிவி கேமிராக்கள் செயல்படவில்லை என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, கோடநாடு தனியார்வசம் போன பிறகு பாதுகாப்பு எப்படி கொடுக்க முடியும்..? எனக் கேட்டார்.
கோடநாடு விவகாரம் தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் காரசார விவாதம் நடைபெற்றது பெரும் பரபரப்பை கிளப்பியது