வருகின்ற உள்ளாட்சித் தேர்தலில் அசம்பாவிதங்கள் நடப்பதாக வண்ணம் மாவட்ட காவல்துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கை


ராணிப்பேட்டை மாவட்டத்தில் வருகின்ற6.10.21 மற்றும் 9.10.21 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையத்தின் நடத்த திட்டமிடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது

 தேர்தல் எந்த இடையூறும் இல்லாமல் மேலும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க காவல் துறை பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது அந்த வகையில் ஏற்கனவே சமூக விரோதிகள் குற்றச் செயலில் ஈடுபடுவோர் கண்டறியப்பட்டு அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது

 இதன் தொடர்ச்சியாக கிராமங்கள் செல்வோம் என்ற நடைமுறை 27.09.21 தேதி முதல் துவக்கப்பட்டுள்ளது இந்த நடைமுறை குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் தீபா சத்யன்  கூறியதாவது ராணிப்பேட்டை மாவட்டத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தல் எவ்வித அசம்பாவிதமும் இன்றி அமைதியான முறையில் நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில்

 கிராமங்கள் செல்வோர் என்று நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது இதன் படி காவல் நிலைய அதிகாரிகள் காவல் ஆய்வாளர் உதவி ஆய்வாளர் தினசரி பத்து கிராமங்களுக்கும் துணை காவல் கண்காணிப்பாளர் நிலையில் தினசரி 5 கிராமங்களுக்கும் 

காவல் கண்காணிப்பாளர் தினசரி மூன்று கிராமங்களுக்கும் நேரடியாக சென்று பொது மக்களுடன் நல்லுறவை ஏற்படுத்தி தேர்தல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு கிராம மக்களின் நம்பிக்கையை பெற்றிடவும் மேலும் குற்றவாளிகள் மற்றும் அவர்களை சார்ந்த அவர்களின் நடவடிக்கைகளை கண்காணிப்பது

 குற்றச்செயல்கள் நடைபெறாத வண்ணம் தடுப்பு நடவடிக்கைகளை  மேற்கொள்வது சிறந்த முறையில் செயல்பாடுகளை ஆய்வு செய்வது ஆகிய பணிகள் மேற் கொள்வார்கள் மேலும் அனைத்து அதிகாரிகளும் அவர்களின் இந்த நடைமுறையின் படி காவல் நிலைய அதிகாரிகள் துணை காவல் கண்காணிப்பாளர்கள்

 அவர்களின் தினசரி பயணம் மற்றும் பணி குறித்த விவாதத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பார்வைக்கு சமர்ப்பிக்க வேண்டும் இந்த நடைமுறையின் மூலம் பொதுமக்கள் காவல்துறை நல்லுறவு மேம்படுவதோடு

 குற்ற செயல்கள் நடைபெறாமல் அமைதியான முறையில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற ஏதுவாக இருக்கும் என தெரிவித்தார்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)