ஆர்காடு கிழக்கு மற்றும் மேற்கு ஒன்றிய திமுக பொதுக்குழு உறுப்பினர் கூட்டம

 




 ஆற்காடு கிழக்கு மற்றும் மேற்கு ஒன்றிய திமுக பொதுக்குழு உறுப்பினர் கூட்டம்ஆற்காடு பெரியார் நகரில் அமைந்துள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது 

இந்த நிகழ்ச்சிக்கு ஆற்காடு கிழக்கு ஒன்றிய செயலாளரும் ஆற்காடு நகர கூட்டுறவு கடன் சங்கம் தலைவருமான எம்.வி பாண்டுரங்கன் தலைமை தாங்கினார் 

 ஆற்காடு மேற்கு ஒன்றிய செயலாளர் ஏ.வி நந்தகுமார் வரவேற்புரையாற்றினார் ஒன்றிய அவைத்தலைவர் எம்.பி சேகர், ஒன்றிய பொருளாளர் 

டீ தணிகைவேல், ஒன்றிய திமுக துணைச் செயலாளர் ஜி.பண்டரிநாதன், ஒன்றிய திமுக துணைச் செயலாளர் ஜீவா நாயகம், மாவட்ட பிரதிநிதி விஜயரங்கன், வி.மணி, மாவட்ட பிரதிநிதி அன்பு, பி.மணிவண்ணன்

 ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் பி.கஜபதி, மேற்கு ஒன்றிய பொருளாளர் 

கே.எல் வீரமணி, துணை செயலாளர் தண்டாயுதபாணி, துணை செயலாளர் ஆறுமுகம், மாவட்ட பிரதிநிதி அண்ணாதுரை, மாவட்ட பிரதிநிதி ஜெய பிரசாத், பிரதிநிதி ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்

இந்த நிகழ்ச்சிக்கு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் வேலூர் கிழக்கு மாவட்ட திமுக கழக செயலாளர் ஆர் காந்தி மற்றும் அரக்கோணம் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர்

 எஸ்.ஜெகத்ரட்சகன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மற்றும் ஆற்காடு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜெ.எல் இஸ்வரப்பன்

 மாவட்ட துணைச் செயலாளர் 

ஏ.கே.சுந்தரமூர்த்தி ஆகியோர் சிறப்புரையாற்றினர் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி பேசுகையில் திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான 

மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்று 125 நாட்கள் மட்டுமே ஆகிறது ஆனால் அவர் செய்த சாதனையை உலகமே பாராட்டுகிறது

 திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு முதல் உள்ளாட்சித் தேர்தலை சந்திக்கிறது 9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது மக்கள் திமுகவின் மீது நம்பிக்கை வைத்து ஓட்டுப்போட்டு அதிகாரத்தை கொடுத்திருக்கின்றனர்

 ஏனென்றால் திமுகவின் ஆட்சி மக்களுக்கான ஆட்சி என்றார் அதனைத் தொடர்ந்து பேசுகையில் ஆற்காடு ஒன்றியத்தை பொருத்தவரையில் மேற்கு ஒன்றிய செயலாளராக நந்தகுமாரும் கிழக்கு ஒன்றிய செயலாளராக பாண்டுரங்கன் செயல்பட்டு வருகிறார் 

மேற்கு ஒன்றியத்தில் 14 பஞ்சாயத்துகளும் கிழக்கு ஒன்றியத்தில் 25 பஞ்சாயத்துகளும் உள்ளன இரண்டு பேருமே திறமையாக செயல்படக்கூடிய ஒன்றிய செயலாளர்கள் பாண்டுரங்கனை பொறுத்தவரையில் 100 சதவீதம் வாக்குகளை பெற்றுதந்து உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற செய்வார் என்று நம்புகிறேன் என்றார்

 மேலும் சாதி மதம் பேதமின்றி வார்டு உறுப்பினர், தலைவர், ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட கவுன்சிலர் போன்ற பதவிகளுக்கு யார் போட்டியிட்டாலும் நோட்டீஸ் வடிவமைப்பில் நான்கு பேரும் ஒவ்வொருவரின் பெயரையும் போட்டு ஒற்றுமையோடு செயல்பட வேண்டும் என்று கூறினார்

 வேட்பாளர்கள் தேர்வு செய்வதை பொருத்தவரை ஒன்றிய செயலாளர்கள் தகுதியான ஆட்களை தேர்ந்தெடுத்து வேட்பாளர்களை அறிவிப்பார் என்றார் அதனைத் தொடர்ந்து அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் பேசுகையில் ஒரு சட்டமன்ற உறுப்பினர் தன் சொந்த தொகுதியில் எப்படி பணியாற்ற வேண்டும்

 என்பது குறித்து துரைமுருகன் சொல்கிறபோது அதனை காந்தியிடம்தான் கற்றுக்கொள்ள வேண்டும் என்று புகழாரம் சூட்டினார் ஏனென்றால் காந்தி தன் சொந்த தொகுதியில் ஒரு குறையில்லாமல் எந்த பிரச்சினையாக இருந்தாலும் அதை போராடி சாதித்துவிடுவார் என்றார்

 அதனைத் தொடர்ந்து பேசுகையில் இன்றைய தமிழக முதல்வர் தமிழ் நாட்டின் வளர்ச்சிக்கு எப்படிப்பட்ட திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்று சொல்லி உலக அறிஞர்களிடம் கலந்துரையாடி ஆலோசனை பெற்று ஒவ்வொரு மாவட்டத்தையும் வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல வேண்டும் 


என்ற தொலைநோக்கு திட்டங்களை வகுத்து இருக்கிறார் அதிலும் குறிப்பாக ஏழை எளிய மக்கள் வாழும் பகுதிகளை மேம்படுத்த வேண்டும் என்ற தொலைநோக்கு திட்டங்களையும் வரையறுத்து இருக்கிறார் இந்த தொலைநோக்கு திட்டங்களை கிராமப்புறங்களுக்கு கொண்டு சென்று வளர்ச்சி அடைய செய்வது பஞ்சாயத்து தேர்தல் தான் நிர்ணயிக்கிறது


 பஞ்சாயத்து தேர்தலில் திமுக சார்பில் வெற்றி பெறும் அனைத்து வேட்பாளர்களும் ஒற்றுமையுடன் செயல்பட்டு தமிழகத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வதற்கு துணை புரிய வேண்டும் என்றார் மேலும் அவர் பேசுகையில் எம்எல்ஏ எம்பிக்கு இல்லாத அதிகாரம் பெற்றவர்கள்தான் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெறும்

 தலைவர் மற்றும் ஒன்றிய கவுன்சிலர்கள் அவர்களுக்கு செக்பவர் என்கின்ற மிகப்பெரிய அதிகாரம் வழங்கப்படுகிகிறது என்றார் மேலும் உங்கள் தொகுதிக்கு ஒரு நல்ல சட்டமன்ற உறுப்பினரும் அமைச்சரும் கிடைத்திருக்கிறார் அவரிடம் எதைக் கேட்டாலும் உடனே செய்து தர கூடிய ஆற்றல் படைத்தவர்

 எனவே ஒற்றுமையுடன் செயல்பட்டு வெற்றிகளைப் பெற்று முதலமைச்சரின் தொலைநோக்கு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டார் மேலும் இந்த நிகழ்ச்சிக்கு ஏவி சரவணன் நகர செயலாளர் டி எம் எஸ் ராஜசேகர் பொதுக்குழு உறுப்பினர் ஒன்றிய, நகர ,கிளை கழகசெயலாளர்கள் உள்ளிட்ட ஏராளமான திமுகவினர் கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்