சிக்னலில் நின்ற பெண்ணிடம் பணம் கேட்ட திருநங்கை: தர மறுத்ததால் ஆபாச பேச்சு…முகம் சுழிக்க வைத்த செயல்..!!

 கோவை: போக்குவரத்து சிக்னலில் நின்றிருந்த பெண்ணிடம் திருநங்கை ஒருவர் பணம் கேட்டு பிரச்சனை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவையில் உள்ள போக்குவரத்து சிக்னல்களில் வாகன ஓட்டிகள் காத்திருக்கும் போது அங்கு வரும் திருநங்கைகள் அவர்களிடம் பணம் கேட்பது வாடிக்கையாகி வருகிறது. அவ்வாறு வாகன ஓட்டிகள் பணம் கொடுக்க மறுத்தால், சில திருநங்கைகள் அவர்களை தரக்குறைவாக பேசுவதும், ஆபாச செய்கைகள் செய்வதும் தொடர்கதையாகி வருகிறது.

அந்த வகையில், இன்று காலை கோவை உப்பிலிபாளையம் சிக்னலில் தனது வாகனத்தில் காத்திருந்த பெண் ஒருவரிடம் திருநங்கை ஒருவர் பணம் கேட்டுள்ளார். அதற்கு அந்த பெண் மறுக்கவே, திருநங்கை அவரை தரக்குறைவாக பேசியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த பெண், சிக்னலிலேயே வாகனத்தை நிறுத்திவிட்டு திருநங்கையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பொதுமக்களை தொந்தரவு செய்யும் திருநங்கையை கைது செய்ய வேண்டும் என்று அங்கிருந்த போலீசாரிடம் புகார் அளித்தார். தொடர்ந்து போலீசார் இருவரையும் சமாதனப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

கோவை மாநகரில் பல சிக்னல்களில் திருநங்கைகள் இது போன்ற செயல்களில் ஈடுபட்டு பொதுமக்களுக்கு தொல்லை கொடுத்து வருகின்றனர். மேலும், அவர்கள் முகக்கவசம் அணிவது இல்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்து வருகிறது. இதுமட்டுமின்றி குழந்தைகளை வைத்து பிச்சையெடுத்து வாகன ஓட்டிகளை தொந்தரவு செய்வதும் தொடர்கதையாகி வருகிறது.

இதுபோன்ற செயல்களைல் ஈடுபடுவோர் மீது போலீசார் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)