ரயில் தண்டவாளத்தில் போதையில் உறங்கிய நபர் - ரயில் ஏறியும் உயிர் பிழைத்த அதிசயம்..!

 கோவை அருகே ரயில்வே தண்டவாளத்தில் மது `போதையில் தூங்கிய நபர் மீது ரயில் கடந்துச் சென்ற நிலையில், அந்த நபர் எவ்வித காயமுமின்றி உயிர் பிழைத்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. கோவை - மேட்டுப்பாளையம் இடையே தினமும் பயணிகள் ரயில் சேவை இயங்கி வருகிறது. எட்டு பெட்டிகள் கொண்ட இந்த ரயில் 614 பேர் இருக்கையில் அமர்ந்து பயணிக்கும் வகையிலும், ஆயிரத்து 500க்கும் மேற்பட்டோர்  நின்று கொண்டு பயணிக்கும் வகையிலும் அமைந்துள்ளது. கோவையில் இருந்து மேட்டுப்பாளையம், நீலகிரி செல்வோரும், அங்கிருந்து கோவை வரும் பயணிகளுக்கும் இந்த இரயில் பயனுள்ளதாக இருந்து வருகிறது.

இந்நிலையில் நேற்று மாலை கோவை இரயில் நிலையத்தில் இருந்து மேட்டுப்பாளையம் நோக்கி வழக்கம் போல கோவை – மேட்டுப்பாளையம் பயணிகள் இரயில் சென்று கொண்டிருந்தது. அப்போது துடியலூர் பகுதிக்கும், பெரியநாயக்கன்பாளையம் பகுதிக்கும் இடைப்பட்ட பகுதியில் தண்டவாளத்தில் ஒருவர் மது போதையில் மயங்கிய நிலையில் இருந்துள்ளார். ரயில்வே தண்டவாளத்தில் ஒருவர் படுத்திருப்பதை தூரத்தில் இருந்து கவனித்த இரயில் இன்ஜின் டிரைவர், ரயிலில் இருந்து தொடர்ந்து சத்தம் எழுப்பியுள்ளார். அந்த சத்தங்களை பொருட்படுத்தாத அந்த நபர் தண்டவாளத்தில் இருந்து எழுந்திருக்கவில்லை. இதையடுத்து இஞ்சின் டிரைவர் ரயிலை நிறுத்த முற்பட்டப் போது, ரயில் பெட்டிகள் மது போதையில் படுத்து இருந்த நபரை கடந்து நின்றது.ரயில் தண்டவாளத்தில் போதையில் உறங்கிய நபர் -  ரயில் ஏறியும் உயிர் பிழைத்த அதிசயம்..!


இதையடுத்து இரயில் சில அடி தூரம் தாண்டி சென்று நின்ற நிலையில், இரயில்வே ஊழியர்கள் மற்றும் பயணிகள் இறங்கி இரயில்வே தண்டவாளத்தில் இருந்த நபரை தேடியுள்ளனர். அப்போது அந்த நபருக்கு எந்த வித காயமும் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அந்த நபரை தட்டி எழுப்பி தண்டவாளத்தில் இருந்து பத்திரமாக வெளியேற்றினர். பின்னர் போதையில் இருந்த நபர் எச்சரித்து அனுப்பி வைக்கப்பட்டார். ரயில்வே தண்டவாளத்தில் ரயில் பெட்டிகளுக்கு அடியே படுத்திருந்த போதை நபரை பயணிகள் தட்டி எழுப்பி மீட்பதையும், போதையில் அந்த நபர் சரிந்து விழுவதையும் அங்கிருந்த சில பயணிகள், செல்போனில் படம் பிடித்துள்ளனர்.கோவை - மேட்டுப்பாளையம் :

இரயில் தண்டவாளத்தில் மது போதையில் படுத்து உறங்கிய மதுப்பிரியர்
இரயிலை நிறுத்தி மதுப்பிரியரை தட்டி எழுப்பிய இரயில்வே ஊழியர்கள் 

இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த காட்சிகளுக்கு ”அப்படி என்ன சரக்கா இருக்கும்?”, “அதிர்ஷ்டம்னா இது தான்?” என்பது போன்ற பல கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். தண்டவாளத்தில் படுத்திருந்த நபர் மீது ரயில் பெட்டிகள் தாண்டி நின்றும், 

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)