திருட மாஸ்டர் ப்ளான் போட்ட திருடன்.. துடைப்பத்தால் அடித்து விரட்டிய மூதாட்டி!

 


திருச்சி மாவட்டத்தில் அமைந்துள்ளது திருவெறும்பூர். தமிழ்நாட்டில் பல பகுதிகளிலும் வீடுகள் இல்லாத ஆயிரக்கணக்கான நபர்கள் கடைகளின் முன்பு உள்ள பகுதிகளில் இரவு நேரத்தில் தங்கி வருகின்றனர். இந்த வகையில் திருவெறும்பூரில் கடைகள் அதிகளவில் உள்ள பகுதிகளில், கடை ஒன்றின் முன்பு தூங்குவதை மூதாட்டி ஒருவர் வழக்கமாக கொண்டுள்ளார்.

இந்த நிலையில், ஓரிரு தினங்களுக்கு முன்பு மூதாட்டி வழக்கமாக தூங்கும் கடையின் முன்பு தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக வந்த மர்ம ஆசாமி ஒருவர் வந்துள்ளார். அவர் மூதாட்டியிடம் சுருக்கு பை இருப்பதை கண்டார். மூதாட்டி நன்றாக தூங்கிக் கொண்டிருந்ததால் அவர் அருகே சென்று அந்த மர்ம ஆசாமி சுருக்கு பையை நன்றாக நோட்டமிட்டுள்ளார்.சுருக்குப் பையை திருட மாஸ்டர் ப்ளான் போட்ட திருடன்.. துடைப்பத்தால் அடித்து விரட்டிய மூதாட்டி!


இதற்காக, போன்பேசுவது போல செல்போனை காதில் வைத்துக் கொண்டு மூதாட்டியின் அருகிலே நின்று கொண்டு நோட்டமிட்டுள்ளார். நீண்ட நேரம் நோட்டமிட்ட பிறகு, அந்த மர்ம ஆசாமி மூதாட்டியின் காலுக்கு அருகிலே சத்தமே இன்றி அமர்ந்துள்ளார். நீண்ட நேரமாக அமர்ந்து கொண்டிருந்த அந்த மர்ம ஆசாமி, மூதாட்டி நன்றாக தூங்கிக் கொண்டிருக்கிறார் என்பதை உறுதி செய்த பிறகு மூதாட்டியின் போர்வையை விலக்கி, அவர் படுக்கைக்கு கீழே வைத்திருந்த சுருக்கு பையை எடுக்க முயற்சித்துள்ளார்.

ஆனால், அந்த நேரம் ஏதோ ஒன்று காலின் கீழே ஊர்வதைப் போல இருப்பதை உணர்ந்த மூதாட்டி சட்டென்று தூக்கம் கலைந்து விழித்துள்ளார். அப்போது பார்த்தபோது மர்ம ஆசாமி அந்த இடத்தை விட்டு நகர்ந்து செல்ல முயற்சித்ததை மூதாட்டி கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். உடனே, அதிர்ச்சியடைந்து எழுந்த மூதாட்டி உடனே சுதாரித்துக் கொண்டு தனக்கு  அருகிலே இருந்த துடைப்பத்தை கையில் எடுத்தார்.

மூதாட்டி எழுந்ததை கண்டு மாட்டிக் கொண்டு விட்டோம் என்று அதிர்ச்சியடைந்த மர்ம ஆசாமி, உடனே அந்த இடத்தில் இருந்து தப்பித்தால்போதும் என்று தனது செருப்பை போட்டுக்கொண்டு தப்பிக்க முயற்சித்துள்ளார். ஆனால், அதற்குள் துடைப்பத்தை கையில் எடுத்த மூதாட்டி அந்த மர்ம ஆசாமியை துடைப்பத்தாலே வெளுக்கத் தொடங்கி விட்டார்.


சுருக்குப் பையை திருட மாஸ்டர் ப்ளான் போட்ட திருடன்.. துடைப்பத்தால் அடித்து விரட்டிய மூதாட்டி!


இந்த காட்சிகள் மூதாட்டி வழக்கமாக தூங்கும் கடையின் முன்பு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் முழுவதுமாக பதிவாகியுள்ளது. கண்காணிப்பு கேமராவில் பதிவான இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு, இதே மூதாட்டி தனது தொழிலுக்காக கடன் வாங்கிய ரூபாய் 20 ஆயிரம் திருடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அது முதல் அந்த மூதாட்டி தூங்கும் நேரத்திலும் மிகவும் விழிப்புடன் இருந்து வருகிறார். மிகவும் விழிப்புடன் இருந்த காரணத்தாலே மூதாட்டியால் தனது சுருக்கு பையில் இருந்த பணத்தை காப்பாற்ற முடிந்துள்ளது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)