பள்ளி மாணவிகளுக்கு செல்போனில் பாலியல் தொல்லை : தனியார் பள்ளி ஆசிரியர் பணிநீக்கம்..!!

 


புதுக்கோட்டை: 11ஆம் வகுப்பு மாணவிக்கு செல்போனில் பாலியல் தொல்லை கொடுத்த தனியார் பள்ளி ஆசிரியர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

புதுக்கோட்டை மறுப்பினிசாலையில் உள்ள தனியார் பள்ளியில் 11ஆம் வகுப்பு மாணவிக்கு அதே பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் சண்முகநாதன் என்பவர் தொலைபேசி மூலம் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இது தொடர்பாக புதுக்கோட்டை மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு மையத்தில் மாணவியின் பெற்றோர் புகார் கொடுத்துள்ளனர்.

அதன்பேரில், மாணவியுடன் ஆசிரியர் செல்போனில் பேசிய உரையாடலை வைத்து விசாரணை செய்ததன் அடிப்படையில், மாவட்ட குழந்தைகள் நலக் குழு தலைவர் ஸ்டெல்லா புஷ்பராணி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார்.

இதையடுத்து தனியார் பள்ளி நிர்வாகம் ஆசிரியர் சண்முகநாதனை பணி நீக்கம் செய்து நடவடிக்கை மேற்கொண்டது. அதேவேளையில், புகார் மீது நடவடிக்கை எடுக்க போலீசார் தயக்கம் காட்டி வந்த நிலையில், நீதிபதியே நேரடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க ஆணையிட்டுள்ளார். இதைத் தொடர்ந்து, காமுகன் சண்முகநாதனை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

சமூக வலைதள யூடியூபருக்கு, 1 லட்சம் அபராதம் கட்டிய உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா – மனித உரிமை ஆணையம் உத்தரவு