நகைக்கடன்களை ஆய்வு செய்ய குழு: தமிழ்நாடு அரசு உத்தரவு

 


கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் முறைகேடு தொடர்பாக வங்கிகளில் பெறப்பட்ட அனைத்து பொது நகைக்கடன்களையும் 100 சதவீதம் ஆய்வு செய்ய குழு அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

5 சவரன் மட்டுமல்லாமல் வங்கிகளில் பெறப்பட்ட அனைத்து நகைக்கடன்களையும் ஆய்வு செய்ய இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது.இதன்படி கூட்டுறவு சார்பதிவாளர், கூட்டுறவு வங்கியின் சரக மேற்பார்வையாளர், நகை மதிப்பீட்டாளர் ஆகியோர் அடங்கிய குழு அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

சென்னை மண்டலத்தில் துணை பதிவாளர்களை கொண்ட குழு ஆய்வு செய்து அறிக்கை தர உத்தரவு பிறப்பித்துள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் ஆய்வு செய்து நவம்பர் 20ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக கூட்டுறவு வங்கிகளில் அடகுவைக்கப்பட்ட 5 சவரன் நகைகள் தள்ளுபடி செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தநிலையில், இதற்கான ஆய்வுகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த ஆய்வில் பல்வேறு மாவட்டங்களில் நகைக்கடன்கள் வழங்கியதில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.