பக்கத்து வீட்டு பாத்ரூமில் ரகசிய கேமரா பொருத்தி இளம்பெண்ணை ரசித்த இளைஞர் : கோவை அருகே ஷாக்!!
பக்கத்து வீட்டு பாத்ரூமில் கேமரா பொருத்தி இளம்பெண் குளிப்பதை ரசித்த இளைஞரை போலீசார் கைது செய்துள்னர்.
கோவை அம்மன் குளம் புது ஹவுஸிங் யூனிட் பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவரின் மனைவி கார்த்திகை பிரியா (வயது 23). இவர் குடும்பத்தோடு வசித்து வருகிறார். இவரது வீட்டின் அருகில் வசிப்பவர் முருகன் என்பவரின் மகன் கௌதம் (வயது 20).இந்த நிலையில் கார்த்திகை ப்ரியா வீட்டு பாத்ரூமில் கௌதம் ரகசிய கேமரா ஒன்றை பொருத்தி அவர் குளிப்பதை பார்த்து ரசித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று காலை கார்த்திகை பிரியா பாத்ரூமில் குளிக்க சென்றபோது ரகசிய கேமரா பொருத்தி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து உடனே தனது கணவர் மற்றும் அருகில் உள்ளவர்களிடம் கூறினார். உடனே அவரது வீட்டின் அருகில் உள்ள சுரேஷ், அஜீத், சஞ்சய் ஆகியோர் இது குறித்து கேமரா பொருதியதாக கௌதமிடம் கேள்வி எழுப்பினர். இதையடுத்து இரு தரப்பினரிடையே தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றிய நிலையில் கௌதமை அனைவரும் அடித்து உதைத்தனர் .
இதைத் தொடர்ந்து கார்த்திகை பிரியா ராமநாதபுரம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்திய போலீசார் பக்கத்துவீட்டு பாத்ரூமில் கேமரா பொருத்திய வாலிபர் கௌதமை கைது செய்து சிறையில் அடைத்தனர் .
தொடர்ந்து கௌதமை தாக்கியதாக கௌதம் அளித்த புகாரின் பெயரில் சுரேஷ், அஜித், சஞ்சய் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.