பொது மக்கள் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்களின் கருத்து கேட்பு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் கிளாஸ்டன் புஷ்பராஜ் தலைமையில் நடைபெற்றது.......

 


தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சட்டமன்ற கூட்டத்தொடர் உள்ளாட்சி மானியக் கோரிக்கையின் போது விதி எண் 110-ன் கீழ் சோளிங்கர் பேருராட்சி நகராட்சியாக மாற்றிட அறிவிப்பை வெளியிட்டார்கள் அதனைத் தொடர்ந்து சோளிங்கர் பேரூராட்சியுடன் பாண்டியன் நல்லூர் ஊராட்சி மற்றும் சோமசுந்தரம் ஊராட்சிகளை இணைத்து சோளிங்கர் நகராட்சி அமைக்கப்பட உள்ளது.

 சோளிங்கர் பேரூராட்சி பகுதியைச் சார்ந்தவர்கள் மற்றும் பாண்டியன் நல்லூர் சோமசுந்தரம் ஊராட்சி பகுதிகளில் சார்ந்த அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் பொதுமக்களிடம் நகராட்சி தரம் உயர்த்துவது குறித்து ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் பேரூராட்சி வி.பி.என் திருமண மண்டபத்தில் பொது மக்கள் கருத்துகேட்பு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் கிளாஸ்டன்  புஷ்ப ராஜ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

 கூட்டத்தில் பேரூராட்சிப் பகுதிகளில் நகராட்சியாக தரம் உயர்த்தும் போது வார்டு பகுதிகள் வார்டுகளை சீரமைப்பது மற்றும் உட்கட்டமைப்பு மேம்படுத்திட வேண்டும் என்று பேரூராட்சி பகுதியை சேர்ந்தவர்கள் தெரிவித்தனர்.

 


பாண்டியன் நல்லூர் மற்றும் சோமசுந்தரம் ஊராட்சி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கிராம பகுதிகளை நகருடன் இணைக்கும் போது கிராம பகுதிகளில் உள்ள பெண்களுக்கு கிடைக்கும் 100 நாள் வேலைத் திட்டம் முழுமையாக போய்விடும் இதனால் எங்கள் குடும்பம் கஷ்டப்படும் என்று தெரிவித்தனர்.

 இதை நம்பி தான் இந்த கிராமத்தில் வாழ்ந்து வருகின்றோம் மேலும் வரி உயர்வு அதிகரிக்கும் என்றும் தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர். மகளிர் குழு பெண்கள் பகுதியில் மகளிர் குழுக்களின் செயல்பாடுகள் குறைந்து விடும் என்று தெரிவித்தனர். 

இந்த கருத்துக்களை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் கேட்டுக் கொண்டு கிராமப் பகுதிகளில் பொதுமக்கள் அனைத்து அரசியல் கட்சியினர் தெரிவித்த கருத்துகள் மற்றும் பேரூராட்சி பகுதிகளில் தெரிவித்த கருத்துக்கள் அத்தனையும் முழுமையாக அரசுக்கு அறிக்கையாக அனுப்பி வைக்கப்படும்


 கட்டாயமாக இவைகளைத் தீர்க்க வழிவகை உண்டு அரசு இதனை பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்கள். மக்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ளும், பொதுமக்கள் தங்களுடைய கருத்துகளை மக்களாக எழுதி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் ஒப்படைத்தனர்.

 பொது மக்கள் அனைவரின் கருத்துக்களும் பதிவு செய்யப்பட்டு அரசுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்கள். இந்த கருத்து கேட்பு கூட்டத்தில் உதவி இயக்குனர் பேரூராட்சிகள் இளங்கோவன்

 உதவி இயக்குனர் ஊராட்சிகள் குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் அன்பரசன், பேரூராட்சி செயல் அலுவலர்கள் ரேவதி, மனோகரன், செண்பகராஜன், மற்றும் அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்டுகள், செல்போன் மூலம் எடுக்கும் வசதி அறிமுகம் - எப்படி டிக்கெட் எடுப்பது ? தெற்கு ரயில்வே விளக்கம்

நெல்லை : எஸ்.ஐ மார்க்கெட் தெரசா தாக்கப்பட்டாரா ........ அறுக்கப்பட்டாரா