யாருடா மகேஷ்…?? கள்ளக்காதலுனுக்காக முட்டுக்கொடுத்த பெண் காவல் ஆய்வாளர் : ஆடியோவால் சிக்கிய காதல் நாடகம்!!

 


வடமாநில டிஐஜி எனக்கூறி நாகையில் கைவரிசை காட்டிய நபர் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் பெண் காவல் ஆய்வாளரின் ஆண் நண்பன் கைது செய்யப்பட்டுள்ளான்.

நாகப்பட்டினம் புதிய கடற்கரை செல்லும் சாலையில் அமைந்துள்ள தனியாருக்கு சொந்தமான சூப்பர் மார்க்கெட்டில் கடந்த 24 ம் தேதி காரில் வந்த நபர் பொருட்கள் வாங்கினார். உடனே கேசியர் வாங்கிய பொருட்களுக்கு பில்லை கொடுத்து பணம் கேட்டார். அதற்கு அந்த நபர் பணம் தராமல் சென்றார்.

கடை ஊழியர் பொருட்களுக்கான பணத்தை கேட்ட போது காரில் வந்து பணத்தை பெற்றுக் கொள்ளுமாறு கூறினார். உடனே கேசியர் விக்னேஷ்வரன் கார்டு இயந்திரத்துடன் காருக்கு அருகில் சென்றார்.

கார்டு இயந்திரத்தில் ஏடிஎம்., கார்டு மூலமாக பணம் செலுத்திய காருக்குள் இருந்த நபர் தன்னை  மகேந்திரவர்மா என்றும், குஜராத்தில் டிஐஜியாக இருப்பதாக கூறினார். நாகை எஸ்பியை நான் கூப்பிட்டால் உடனே வருவார். அப்படி இருக்கும் என்னிடமே பணம் கேட்கிறாயா என மிரட்டினார். இதில் சந்தேகமடைந்த  விக்னேஷ்வரன் வெளிப்பாளையம் போலீசில் புகார் செய்தார்.

இதன் பேரில் வெளிப்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த நபரை தேடி வந்தனர். இந்நிலையில் கடந்த  28ம் தேதி வெளிப்பாளையம் தம்பித்துரை பூங்கா அருகே பழக்கடை வைத்திருக்கும்  ரவி என்பவரிடம் காரில் வந்த நபர் ஆயிரம் ரூபாய்க்கு பழங்கள் வாங்கி கொண்டு டிஐஜி என கூறி மிரட்டி சென்றார். இது குறித்து ரவி வெளிப்பாளையம் போலீசில் புகார் செய்தார்.

இந்த இரண்டு புகார்களை பெற்ற வெளிப்பாளையம் இன்ஸ்பெக்டர் தியாகராஜன் இந்த இரண்டு சம்பவங்களிலும் ஈடுபட்டது ஒரே நபர் தான் என உறுதி செய்து மதுராந்தகத்தை சேர்ந்த மகேஷ் என்பதையும் கண்டுபிடித்து அவரை தேடி வந்தனர்.

இந்நிலையில் நாகூர் அருகே மேலவாஞ்சூர் சோதனைச்சாவடி அருகே சந்தேகத்தின் பேரில் ஒருவர் நிற்பதாக வெளிப்பாளையம் போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அவரை விசாரணைக்கு அழைத்து வந்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில் அந்த நபர் காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் தாலுக்கா ஜமீன்புதூர் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் மகன் மகேஷ் என்பது தெரியவந்தது. இவர் கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு திருப்போரூர் காவல் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய கவிதாவிடம் ஓட்டுனராக பணிபுரிந்தது தெரியவந்தது.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)