சுவாதியை கொன்னது யாருன்னு ”திமுக அரசாவது கண்டுப்பிடிக்கணும்” : ராம்குமார் அப்பா பேட்டி

 


தமிழகத்தையே பரபரப்பாக்கிய சுவாதி படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமாரின் சிறை மரணம் நடந்து 5 ஆண்டுகள் ஆகின்றன. "மின் கம்பியை கடித்து தற்கொலை செய்துகொண்டான் ராம்குமார்" என்று சிறைத்துறை அறிவித்தாலும் ராம்குமாரின் மரணத்தில் பலத்த சந்தேகங்கள் இருப்பதாக கருத்துக்கள் பலரால் முன்வைக்கப்பட்டு வருகின்றன. சமீபத்தில், "ராம்குமார் மின்வயரைக் கடித்து தற்கொலை செய்துகொள்ளவில்லை" என்று மனித உரிமை ஆணையத்தில் ஆஜரான அரசு மருத்துவர்கள் கொடுத்த வாக்குமூலம், பரபரப்பையும் சர்ர்சையையும் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், ராம்குமாரின் அப்பா பரமசிவனிடம்  இதுகுறித்து பேசினோம்.

எப்படி இருக்கிறீர்கள்?

”ராம்குமார் இறந்து 5 வருஷம் ஆகுது. ஆனா, எங்கக் குடும்பமே அவனை நினைச்சி ஏங்கிக்கிட்டிருக்கோம். என் மனைவி புஷ்பம் மகனை நினைச்சி அழுவாத நாளில்லை. நடைபிணமாவே ஆகிட்டா. எங்களுக்கு கல்யாணம் ஆகி 7 வருஷமா குழந்தை இல்லை. தவம் இருந்து பெத்தப் புள்ளைத்தான் ராம்குமார். அவனுக்கு அடுத்ததாதான் ரெண்டு பொண்ணுங்க பொறந்தாங்க. எல்லா சாமிக்கிட்டயும் வேண்டிக்கிட்டு பெத்த, ஒரே மகனை அநியாயமா செய்யாத தப்புக்கு காவல்துறை கொன்னுடுச்சி. இப்பவும் மகனை நினைச்சி கஷ்டத்துலதான் வாழ்ந்துட்டிருக்கோம். நாங்களோ மகள்களோ சந்தோஷமான வாழ்க்கையை வாழலை. ஒரே ஆறுதல், ராம்குமார் மூத்த தங்கச்சி மதுபாலாவுக்கு கொஞ்சநாள் முன்னாடி கல்யாணம் பண்ணி வச்சோம். இப்போ, பேரப்பையன் பொறந்திருக்கான். 12 நாள் ஆகுது. அது, அப்படியே என் மகன் ராம்குமார்தான். அவனே, தங்கச்சி வயித்துல மகனா பொறந்திருக்கான்னு நினைச்சிக்கிட்டோம். தங்கச்சிங்கமேல அவ்ளோ பாசம் வச்சிருந்தான். நான், ஓய்வு பெற்றுட்டேன். ராம்குமாரோட ரெண்டாவது தங்கச்சி காளீஸ்வரிதான் இப்போ வேலைக்குப் போயிட்டு இருக்கா. அவளுக்கும் ஒரு கல்யாணம் பண்ணி வச்சிட்டா கொஞ்சம் நிம்மதியாகிடுவோம்”.

மனித உரிமை ஆணையத்தில் மருத்துவர்கள் கொடுத்த வாக்குமூலம் குறித்து?

"காவல்துறையும் அரசும் சேர்ந்துதான் ராம்குமாரை கொலை செஞ்சாங்க. இது கொலைதானே தவிர தற்கொலை கிடையாது. என்ன உண்மையோ அதைத்தான் டாக்டருங்க சொல்லிருக்காங்க. டாக்டருக்கு பொய் சொல்லணும்னு என்ன அவசியம் இருக்கு? அவங்க என்ன எங்களுக்கு ஆதரவான ஆளா? அதிமுக ஆட்சியில் கோரிக்கை வைத்தும் சரியா விசாரணை நடக்கலை. நாங்க தாழ்த்தப்பட்ட சாதின்னு அந்த அரசும் கண்டுக்கலை. இப்போ, திமுக அரசு வந்தப்பிறகுதான் மனித உரிமை ஆணையத்துல இருந்து விடை கிடைச்சுட்டு இருக்கு. முதல்வர் மு.க ஸ்டாலின் கண்டிப்பா உண்மையைக் கொண்டு வருவார் என்ற நம்பிக்கை இருக்கு. திமுக அரசாவது சுவாதியை கொன்னது யாருன்னு கண்டுப்பிடிக்கணும். சுவாதியும் என் பொண்ணு மாதிரிதான். கொன்னது யாருன்னு எங்களுக்கு தெரிஞ்சியே ஆகணும். என் ராம்குமார் நிரபராதின்னு தெரிய வைக்கணும். அது மட்டும்தான் எங்க விருப்பம். என் உயிரே போனாலும் சரி சுவாதியை என் மகன் கொலை செய்யலை”.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)