ஆர்டிஐ கேள்விகளுக்கு உரிய நேரத்தில் பதில் தர வேண்டும் - மாநில தகவல் ஆணையம் உத்தரவு

 


திருச்சி மாவட்ட ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் தொடர்ந்து ஆர்டிஐ மனுக்களுக்கு உரிய பதில் அளிக்காமல் இருப்பதால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழ்நாடு தகவல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்படும் மனுக்களுக்கு சட்டத்திற்கு உட்பட்டு சம்பந்தபட்ட துறையின் பொதுத் தகவல் அலுவலர்கள் பதில் அளிக்க வேண்டும். மேலும் சம்பந்தபட்ட பொதுத் தகவல் அலுவலர் அளிக்கும் பதிலில் திருப்தி இல்லை என்றால் சம்பந்தப்பட்ட மனுதாரர்கள் துறை சார்ந்த மேல்முறையீட்டு அலுவலரிடம் முறையீடு செய்யலாம்.

 இவ்வாறு தாக்கல் செய்யப்படும் மேல்முறையீட்டு மனுக்களுக்கு மேல்முறையீட்டு அலுவலர் உரிய பதில் அளிக்கவில்லை என்றால், மனுதாரர் மாநில தகவல் ஆணையத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யலாம். இந்த மனு மீது மாநில தகவல் ஆணையம் விசாரணை நடத்தி உரிய உத்தரவுகளை பிறபிக்கும். இவ்வாறு திருச்சி மாவட்ட ஊரக வளர்ச்சி தொடர்பான பல மேல்முறையீட்டு மனுக்களை விசாரித்த மாநில தகவல் ஆணையம் சட்டப்படி உரிய தகவல் அளிக்காவிடில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.ஆர்டிஐ கேள்விகளுக்கு உரிய நேரத்தில் பதில் தர வேண்டும் - மாநில தகவல் ஆணையம் உத்தரவு


கோவை மாவட்டத்தைச் சேர்ந்த பாலகுருசாமி மணிகண்டம், ஊராட்சி ஒன்றியத்தில் வீடுகளுக்கு வழங்கப்பட்டுள்ள குடிநீர் இணைப்புகள் உட்பட 6 தகவல்களை கோரியுள்ளார். இதற்கு உரிய பதில் அளிக்காத காரணத்தால் மாநில தகவல் ஆணையத்தில் மேல்முறையீடு மனுவை தாக்கல் செய்தார். இம்மனுவை விசாரித்த தகவல் ஆணையர் தமிழ்குமார், மனுதாரர் கோரிய தகவல்களை இந்த ஆணை கிடைத்த 15 நாட்களுக்குள் வழங்க வேண்டும், இல்லாவிடில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பொது தகவல் அலுவலரும் மணிகண்டம் ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலருக்கு (ஊ) எச்சரிக்கை விடுத்துள்ளது. இதை மனுதாரர் தொட்டியம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட தோளூர்பட்டி ஊராட்சியிலும், மண்ணச்சநல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட பிச்சாண்டாவர்கோவில் ஊராட்சியிலும், வீடுகளுக்கு வழங்கப்பட்டுள்ள குடிநீர் இணைப்புகள் உட்பட 6 தகவல்களை கோரியுள்ளார். இதற்கு உரிய பதில் அளிக்காததால் மாநில தகவல் ஆணையத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார். இந்த மனுக்களை விசாரித்த தகவல் ஆணையர் தமிழ்குமார், மனுதாரர் கோரிய தகவல் இந்த ஆணை கிடைத்த 15 நாட்களுக்குள் வழங்க வேண்டும் என்றும், இல்லாவிடில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தொட்டியம் ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊ) மற்றும் மண்ணச்சநல்லூர் ஊராட்சி ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.ஆர்டிஐ கேள்விகளுக்கு உரிய நேரத்தில் பதில் தர வேண்டும் - மாநில தகவல் ஆணையம் உத்தரவு


மேலும், துறையூர் கோட்டபாளையம் கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் கடந்தாண்டு டிசம்பர் மாதம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் பல்வேறு தகவல் கோரியுள்ளார். இதற்கு பதில் அளிக்காத காரணத்தால் மாநில தகவல் ஆணையத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த மாநில தகவல் ஆணையர் தமிழ்குமார், மனுதாரர் கோரிய தகவல்களை இந்த ஆணை கிடைத்த 15 நாட்களுக்குள் வழங்க வேண்டும் என்றும், இல்லாவிடில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உப்பிலியபுரம் ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலருக்கு (ஊ) எச்சரிக்கை விடுத்துள்ளார்.


மேலும் உரிய பதில் அளிக்காத அப்போது இருந்த பொதுத்துறை தகவல் அலுவலர் மீது சட்டப்படி நாள் ஒன்றுக்கு 250 முதல் 25,000 வரை தண்டம் ஏன் விதிக்க கூடாது என்பதற்கான விளக்கத்தை அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.இதேபோல முசிறி பகுதியை சேர்ந்த செல்வக்குமார், அய்யம்பாளையம் கிராமத்தில் 1995 முதல் கிராம செயலாளராக பணியாற்றிவர்களின் பட்டியல் உட்பட 21 தகவல்களை கோரியுள்ளார். இந்த மனுவிற்கு உரிய தகவல் வழங்காத காரணத்தால் தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை விசாரித்த தகவல் ஆணையர் தமிழ்குமார், மனுதாரர் கோரிய தகவல்களை இந்த ஆணை கிடைத்த 30 நாட்களுக்குள் வழங்க வேண்டும் என்றும், இல்லாவிடில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முசிறி ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலருக்கு (ஊ) எச்சரிக்கை விடுத்துள்ளார்.


இவ்வாறு மேலும் சில ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கும் மாநில தகவல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே தகவல் அறியும் உரிமை சட்ட மனுக்களுக்கு உரிய காலத்திற்குள் தகவல் வழங்க அறிவுறுத்த வேண்டும் என்று தகவல் அறியும் உரிமை சட்ட ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் ஆர்டிஐ மனுவிற்கு உரிய பதில் அளிக்கவில்லை என்று திருச்சி மாவட்ட ஊராட்சி உதவி இயக்குனருக்கு தமிழ்நாடு தகவல் ஆணையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. தற்போது வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கும் தகவல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ள குறிப்பிடத்தக்கது.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)