டாஸ்மாக் கடையில் ஆய்வு செய்த அதிகாரிகளுக்கு அடி, உதை..! பாட்டில்களை வீசி அலப்பறை செய்த போதை ஆசாமிகள்!!
கோவையில் டாஸ்மாக் கடைக்கு சென்ற அதிகாரிகளுக்கு அடி உதை விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவை பட்டணம் சாலை, நெசவாளர் காலணி பகுதியில் உள்ள அரசு மதுபான கடை செயல்பட்டு வருகிறது. அந்தக் கடையில் அதிக கூட்டமாக சேர்ந்து மதுப் பிரியர்கள் மது குடிப்பதாக வந்த தகவலையடுத்து கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல அதிகாரி ஜான்சன் தலைமையில் மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு நடத்த சென்றனர்.
அவ்வாறு ஆய்வு நடத்த செய்ய சென்ற அதிகாரிகள் மீது மதுபோதையில் இருந்தவர்கள் பாட்டில்கள் வீசி தாக்குதல் நடத்தியும் உள்ளனர். தகவல் அறிந்ததும் சக மாநகராட்சி ஊழியர்கள் சம்பவ இடத்திற்க்கு சென்றனர்.
மேலும், அரசு அதிகாரிகளை தாக்கிய குடிமகன்களை பதிலுக்கு தாக்கினர். இதுகுறித்த வீடியோ காட்சி தற்போது வெளியாகியுள்ளது. சம்பவம் குறித்து அறிந்ததும் போலீசார் அப்பகுதிக்கு சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.